MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • சீனாவின் தொல்லை இனி இல்லை! இந்தியா‍-இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சீனாவின் தொல்லை இனி இல்லை! இந்தியா‍-இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

2 Min read
Rayar r
Published : Apr 05 2025, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Major Agreements Signed Between India And Sri Lanka In Front Of Pm Modi : பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து நேரடியாக கொழும்பு விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இலங்கையின் பாரம்பரிய முறைப்படி அந்நாட்டு அரசு உற்சாக வரேவேற்பு அளித்தது. மேலும் கொழும்புவில் ஏராளமான இந்தியர்களும் திரண்டு பிரதமரை வரவேற்றனர். 

24
PM Modi with Sri Lankan President

PM Modi with Sri Lankan President

இலங்கை சென்ற பிரதமர் மோடி

இந்நிலையில், இன்று கொழும்பு சுதந்திர சதுக்கம் சென்ற பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அநுர குமார திசநாயக்க முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, இலங்கைக்கான இந்தியாவின் கடன் சீரமைப்பு உதவி உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து 

இதில் மிக முக்கியமாக, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இருநாட்டு ராணுவம்  இணை பயிற்சிகள், கூட்டு கடல்சார் கண்காணிப்பு மற்றும் வன்பொருள் வழங்கல் ஆகிவை மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் கடற்பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கம் வழங்கிய இலங்கை அரசு!

34
bilateral ties India Lanka

bilateral ties India Lanka

ப‌ல்வேறு விவகார‌ங்கள் குறித்து பேச்சுவார்த்தை 

இதன்பிறகு பிரதமர் மோடியும்,  இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவும் இந்தியா, இலங்கை உறவுகள் குறித்தும், பல்வேறு விவகார‌ங்கள் குறித்தும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர் 

இதன்பிறகு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான மித்ர விபூஷணன் என்ற மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவித்தார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, இந்தியா செய்த உதவிக்கு அதிபர் அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துக் கொண்டார். 

44
India–Sri Lanka Sign Major Bilateral Agreements

India–Sri Lanka Sign Major Bilateral Agreements

சீனாவின் தொல்லை இனி இல்லை

இந்தியாவை அச்சுறுத்த சீனா இலங்கை கடற்பகுதிகளை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற இலங்கையின் நிலைப்பாட்டை அனுர குமார திசாநாயக்க பிரதமர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.

 டிஜிட்டல் பொருளாதாரம் 

''வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்தக் கொள்கை முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, பிரதமர் மோடியும் நானும் பல களங்களில் டிஜிட்டல் மயமாக்கலில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம்'' என்று அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார். மேலும் இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு ரூ.300 கோடி நிதி மானியம் அளித்ததற்காக அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை சென்ற பிரதமர் மோடி.. கடும் மழையிலும் பிரம்மாண்ட வரவேற்பால் நெகிழ்ச்சி!
 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரதமர் மோடி
இலங்கை
இந்தியா
நரேந்திர மோடி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved