லண்டனில் இருந்து டன் கணக்கில் தங்கத்தை எடுத்துச் செல்லும் அமெரிக்க வங்கிகள்! ஏன்?
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்க வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் நியூயார்க்குக்கு அவசரம் அவசரமாக எடுத்துச் செல்கின்றன. இது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

லண்டனில் இருந்து டன் கணக்கில் தங்கத்தை எடுத்துச் செல்லும் அமெரிக்க வங்கிகள்! ஏன்?
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப் பகையாளியாக இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை திடீரென நண்பனாக்கிக் கொண்டுள்ளார். அதாவது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்த இருக்கிறது. உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவூதியில் இன்று அமெரிக்கா வெளியுறத்துறை அமைச்சர்களும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், உக்ரைனுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுக்காதது உலக நாடுகளிடையே பேசும் பொருளாகியுள்ளது. விளாடிமிர் புதினுடன் கைகோர்த்த டொனால்ட் டிரம்ப் தங்களை தூக்கி எறிந்ததால் ஐரோப்பிய நாடுகளும், உக்ரைனும் கடும் அதிருப்தியில் உள்ளன.
டொனால்ட் டிரம்ப்பின் திடீர் மனமாற்றம் குறித்தும், உக்ரைன் ரஷ்யா போரில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது குறித்தும் பாரீஸீல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்துள்ளனர்.
டிரம்ப்-ஐரோப்பிய நாடுகள் மோதல்
இப்படியாக டிரம்புக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில், அமெரிக்கா வங்கிகள், அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை இங்கிலாந்து தலைநகர் லன்டனில் இருந்து டன் கணக்கில் தங்கத்தை அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்கின்றன. லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகின் இரண்டாவது பெரிய இருப்பு மையமாக விளங்கி வருகிறது. இங்கு அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்களின் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், அமெரிக்க வங்கிகள், அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியில் இருந்து தங்கக் கட்டிகளை அமெரிக்காவின் நியூயார்க்குக்கு எடுத்துச் செல்கின்றன. அதாவது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8,000 தங்கக் கட்டிகள் அமெரிக்காவில் இருந்து நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது பேங்க் ஆஃப் இங்கிலாந்து மொத்த இருப்பில் 2% என கூறப்படுகிறது.
தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த விமானம்! பயணிகள் காயம்! என்ன நடந்தது?
அமெரிக்க வங்கிகள்
அமெரிக்க நிறுவனங்கள் லண்டனில் இருந்து தங்கத்தை அவசரம் அவசரமாக எடுத்துச் செல்ல காரணமில்லாமல் இல்லை. அதாவது டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். அதாவது மற்ற நாடுகள் அமெரிக்கா பொருட்களுக்கு எந்த வரி விதிக்கிறதோ, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அமெரிக்கா அவ்வளவு வரி விதிக்கும்.
லண்டன் தங்க இருப்பு மையம்
ஏற்கெனவே கனடா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரி விதிப்பு செய்துள்ளது. இதேபோல் ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேரடியாகவே எச்சரித்து இருந்தார். இதனால் ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் வரி விதிக்கலாம் என்பதால் அமெரிக்க வங்கிகள், அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் தாங்கள் லண்டன் வங்கியில் இருப்பு வைத்திருந்த தங்கங்களை நியூயார்க்குக்கு மாற்றி வருகின்றன.
புதினுடன் கைகோர்த்து ஐரோப்பிய நாடுகளை தூக்கி எறிந்த டொனால்ட் டிரம்ப்; என்ன காரணம்?