சிங்கப்பூர் வானில், மேகமூட்டத்தின் நடுவே பிரகாசமாக தோன்றி பெருமுழு நிலவு!
இந்த ஆண்டு 4 பெரு முழு நிலவுகள் வானில் தோன்றும் என வானில் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அதன் முதல் பெருமுழு நிலவு நேற்றிரவு தோன்றியது. சிங்கப்பூரில் மேக மூட்டத்தின் நடுவே பிகாசமாக தெரிந்த பெருமுழுநிலைவை வானியல் ஆய்வாளர்கள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பெருமுழு நிலவு (BUCK Moon)
பெருமுழு நிலவு என்பது பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் முழு நிலவு. இது வழக்கத்தை விட பெரிதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். உலகின் பெரும்பான பகுதிகளில் நேற்றிரவு பெருமுழுநிலவு வானில் தோன்றி பிரகாசமாக ஜொலித்தது.
சிங்கப்பூரில் தோன்றிய பெருமுழு நிலவு
சிங்கப்பூர் வானில் நேற்றிரவு (3 ஜூலை) ஜொலித்தது 'buck moon" என்ற அந்தப் பெருமுழு நிலவு. நிலவின் வட்டப்பாதை பூமிக்கு மிக அருகில் இருந்ததால் நிலவு இன்னும் அழகாகவும், பெரியதாகவும், ஒளிமயமாகவும் காட்சியளித்தது. இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர்
கடலின் நடுவே மீன் பண்ணைகளை அமைக்கும் சிங்கப்பூர் அரசின் டெண்டர் காலவரையின்றி ஒத்திவைப்பு!
சிங்கப்பூரில், நிலவை படம் பிடிக்க பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் இடங்களில் ஒன்றான மெரினா பேரேஜில் ஏராளமான மக்கள் கூடினர். நேற்றிரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினர், இரவு 7.12 மணிக்கு மேகமூட்டத்தின் நடுவே, பிரகாசமான பெருமுழுநிலவு வானில் தோன்றியது. இதனை வானியல் ஆய்வாளர்கள், இயற்கை ஆரவலர்கள் பலர் படம் பிடித்தனர்.
அடுத்த பெருமுழு நிலவு
நீங்கள் நிலவை காண மறந்துவிட்டீர்களா? கவலைவேண்டாம். இந்த ஆண்டு இன்னும் 3 முறை பெருமுழு நிலவு தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த முழுபெருநிலவு ஆகஸ்ட் -1ம் தேதி, ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 29ம் தேதிகளில் தோன்ற உள்ளது. இன்றே குறித்துக்கொள்ளுங்கள். பெருமுழுநிலவை காண தவறவிடாதீர்கள்
சிங்கப்பூரில் முதாவது ஹைட்டரஜன் எரிபொருள் கொண்ட வாகனத்தின் சோதனை ஓட்டம்!