கடலின் நடுவே மீன் பண்ணைகளை அமைக்கும் சிங்கப்பூர் அரசின் டெண்டர் காலவரையின்றி ஒத்திவைப்பு!
பூலாவ் சாட்டுமு, பூலாவ் ஜோங், பூலாவ் புக்கோம் ஆகிய மூன்று தீவுகளின் அருகே கடலில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கான திட்டங்களை சிங்கப்பூர் அரசு காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
சிங்கப்பூரின் தென் கடல் பகுதியில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகிறது. இதன் அருகே மீன் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான டென்டர் விடும் பணிகளை ஒத்திவைக்கப்படுவதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
மீன் பண்ணை அமைந்தால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளதே காரணம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அதன் மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. பூலாவ் சாட்டுமு, பூலாவ் ஜோங், பூலாவ் புக்கோம் ஆகிய மூன்று தீவுகளுக்கு அருகே உள்ள கடல் பகுதிகள், உள்ளூர் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கான உகந்த இடங்கள் என்று அந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதிகளில் மீன் பண்ணைகள் அமைந்தால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று மீன்வள ஆராய்ச்சியாளர்களும், இயற்கை ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதைதொடர்ந்து, சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத்துறை அமைப்பு, பூலாவ் சாட்டுமு, பூலாவ் ஜோங் ஆகிய தீவுகளைச் சுற்றிலும் மீன் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான டென்டர் விடும் பணிகளை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளன.
தொடர்ந்து, மீன்இன ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் குழுமங்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை நடத்தி, மேலும் பல ஆய்வுகள் நடத்தி முடிக்கப்படும் வரை டென்டர் விடுவது ஒத்திவைக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் டாக்ஸியாக பயன்படுத்தப்படும் லெக்ஸஸ் சொகுசு கார்!
மீன் பண்ணை அமைவதால் அந்தப் பண்ணைகள் மூலம் கடல்நீர் தரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், பருவநிலை மாற்றங்களின் விளைவுகளும் இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மீன் பண்ணைகளால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்றும் சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, மீன் பண்ணை ஒத்திவைக்கும் சிங்கப்பூர் அரசின் முடிவை கடல்சார் ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இனி பிளாஸ்டிக் பைகள் இலவசமா கிடைக்காது.. நாளை வரும் மாபெரும் மாற்றம் - சிங்கப்பூர் அதிரடி!