- Home
- Cinema
- டிரெய்லர்
- டிரெய்லரே இம்புட்டு மாஸா இருக்கே... அப்போ கூலி காலி தான்! மிரள வைக்கும் வார் 2 டிரெய்லர்
டிரெய்லரே இம்புட்டு மாஸா இருக்கே... அப்போ கூலி காலி தான்! மிரள வைக்கும் வார் 2 டிரெய்லர்
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி உள்ள வார் 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

War 2 Trailer
யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் நட்சத்திரம் ஹிரித்திக் ரோஷன் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டார் படம் 'வார் 2'. YRF ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகி உள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டின் பெரிய பான் இந்தியா படங்களில் ஒன்றான இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த டிரெய்லர், பின்னணியில் ஜூனியர் என்.டி.ஆர், ஹிரித்திக் ரோஷனின் குரல், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
வார் 2 டிரெய்லர் ரிலீஸ்
என் பெயர், அடையாளம், வீடு, குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நிழலாகவே இருப்பேன் என்று ஹிரித்திக் கூறும் வசனம், அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. யாராலும் செய்ய முடியாததை நான் செய்வேன் என்று என்.டி.ஆர் கூறும் வசனம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. டிரெய்லரில் உள்ள வசனங்கள் என்.டி.ஆர், ஹிரித்திக் இடையேயான வார்த்தைப் போராகத் தெரிகிறது. இருவரும் மோதிக் கொள்ளும் அதிரடி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. விமானங்களில் நடைபெறும் சண்டைக் காட்சிகள் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்துகின்றன. டிரெய்லரின் கிராபிக்ஸ் சிறப்பாக உள்ளது.
Get ready for the storm, the WAR begins now! #War2Trailer (Tamil) is out!#War2 releasing in Hindi, Telugu & Tamil on August 14th in cinemas
worldwide!@iHrithik | @tarak9999 | @advani_kiara | #AyanMukerji | #YRFSpyUniversepic.twitter.com/n94wSKxLzo— Yash Raj Films (@yrf) July 25, 2025
கூலி உடன் மோதும் வார் 2
அதிரடிப் பட ரசிகர்கள், என்.டி.ஆர், ஹிரித்திக் ரசிகர்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி 'வார் 2' படத்திற்குத் தயாராக வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக டிரெய்லர் உள்ளது. கியாரா அத்வானி பிகினியில் கவர்ச்சி காட்டி, ஹிரித்திக்குடன் காதல் காட்சிகளிலும், அதிரடி காட்சிகளிலும் நடித்துள்ளார். டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வார் 2 திரைப்படம் ஆகஸ்ட் 14-ந் தேதி ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த டிரெய்லர் மூலம் வார் 2 படம் கூலி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
கூலி - வார் 2 இடையே கடும் போட்டி
வார் 2 திரைப்படத்தின் மூலம் ஹிரித்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் இந்த ஆண்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக வார் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூனியர் என்.டி.ஆரின் முதல் பாலிவுட் படம். இப்படத்திற்கு தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ரஜினியின் கூலி படத்தின் 1000 கோடி வசூல் கனவை சல்லி சல்லியாய் நொறுக்க வார் 2 காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இரண்டுமே பான் இந்தியா படங்கள் என்பதால் கடும் போட்டி நிலவி வருகிறது.