என்னது 2040-திலும் திமுக ஆட்சியா? LIK டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணிங்களா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் டிரெய்லரில் ஒளிந்துள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

Love Insurance Kompany First Punch Decoding
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாராவும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமாரும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் கெளரி கிஷான், சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
பர்ஸ்ட் பஞ்ச் என வெளியாகி உள்ள இந்த டிரெய்லரில், துவக்கம் முதலே இது ஒரு டைம் டிராவல் படம் என்பதை காட்டி இருக்கிறார்கள். அனிருத் வாய்ஸ் உடன் தொடங்கும் இந்த டிரெய்லரில், வருஷம் 2040 ஆகிடுச்சு, உலகம் எங்கேயோ போயிடுச்சு என சொல்கிறார். இதன்மூலம் இப்படம் 2040ல் நடக்கும் கதை என்பது தெரிகிறது. இந்த டிரெய்லரில் பல சுவாரஸ்யங்களும் ஒளிந்திருக்கின்றன. அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
2040ல் திமுக ஆட்சி
இந்த டிரெய்லரின் முதல் பிரேமிலேயே சென்னையில் உள்ள புகழ்பெற்ற அடையாறு பாலம் 2040ல் எப்படி இருக்கும் என்பதை காட்டி இருக்கிறார்கள். அதன் பின்னணியில் ஒரு பேனர் உள்ளது. அதில் கலைஞர் மெடா வெர்ஸ் யூனிட் என குறிப்பிட்டு ஒரு பேனர் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ 2040 திலும் திமுக ஆட்சி தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு அருகில் உள்ள மற்றொரு பேனரில் மிஷன் இம்பாசிபிள் 14 என குறிப்பிடப்பட்டு அதில் யாஷின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் அடையாறில் வானிலை 29 டிகிரி என இருப்பதும் பார்க்க முடிகிறது. இதைப்பார்த்த பலரும் அடையாறு எப்படா ஊட்டியா மாறுச்சு என கேட்டு வருகிறார்கள்.
ரஜினி ரெபரன்ஸ்
அதேபோல் மற்றொரு பிரேமில் தலைவர் 189 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது 172 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்த 15 ஆண்டுகளில் அவர் 17 படங்களில் நடித்திருப்பாரா என பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக ஹாலிவுட் என ஆங்கிலத்தில் எழுதி இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டிலும் கோலிவுட் என பிரம்மாண்டமாக எழுதப்பட்டிருப்பது போன்ற காட்சியும் டிரெய்லரில் இடம்பெற்று உள்ளது.
அனிருத்தின் எவர்கிரீன் பாடல்
இசையமைப்பாளர் அனிருத் கடந்த 2015-ம் ஆண்டு ஆகோ என்கிற ஆல்பம் பாடலை வெளியிட்டு இருந்தார். எனக்கென யாரும் இல்லையே என தொடங்கும் அப்பாடலை, இதுவரை எந்த படத்திலும் பயன்படுத்தாமல் இருந்த அனிருத், தற்போது ஒருவழியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அந்தப் பாடல் டிரெய்லரிலும் இடம்பெற்று இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், இப்பாடலுக்காகவே இந்தப் படத்தைப் பார்ப்பேன் என கூறி வருகின்றனர்.