- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: குழந்தை பற்றிய உண்மையை உடைத்த ரேவதி; என்ட்ரி கொடுக்கும் வில்லன் - என்ன நடக்கும்?
Karthigai Deepam: குழந்தை பற்றிய உண்மையை உடைத்த ரேவதி; என்ட்ரி கொடுக்கும் வில்லன் - என்ன நடக்கும்?
கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒருவழியாக கார்த்தி மற்றும் ரேவதி மணமேடை ஏறிய நிலையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் உருவாகிறது. தற்போது வந்துள்ள புது பிரச்சனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
கார்த்திகை தீபம் சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில், கார்த்திக் - ரேவதி திருமணத்தை நிறுத்த ரேவதியின் குழந்தை தீபா மற்றும் கார்த்தியின் அம்மா ஆகியோர் கடத்தப்படுகிறார்கள். அவர்களை கார்த்திக் காப்பாற்றிய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
தீபா யார்?
ரேவதியை அம்மா என தீபா அழைத்ததால், திருமணத்தில் திடீர் சலசலப்பு ஏற்படுகிறது. யார் அந்த குழந்தை என எல்லாரும் ரேவதியை கேட்க, அவள் அது என்னுடைய தோழியோட குழந்தை தான் அவள் பெயர் தீபா. அவளை நான் தான், ஆசிரமத்தில் வைத்து வளர்க்கிறேன் என கூறுகிறாள். ரேவதியின் இந்த செயல் கார்த்திக்கு அவள் மீதான மரியாதையை கூட்டுகிறது.
Karthigai Deepam: தீபா வருகையால் காத்திருக்கும் அதிர்ச்சி! அடுத்தடுத்து அரங்கேறும் கடத்தல்!
கார்த்திக் - ரேவதி கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்குகிறது:
இதனை தொடர்ந்து, மீண்டும் கார்த்திக் - ரேவதி கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்குகிறது. ராஜசேதுபதி ஊரில் இருக்கும் விருமனுக்கு, இந்த விஷயம் தெரிய வரவே... எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என முடிவு செய்கிறான். கார்த்திக் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் கூற நினைக்கும் நிலையில், விருமன் திருமண மண்டபத்திற்கு வருகிறான்.
விருமனை கட்டளையால் அடித்த கார்த்திக்
இதை அறிந்த மயில்வாகனம் விருமனை கட்டையால் அடித்து மயங்க வைக்கிறான். ஆனால் விருமன் எப்படியும் உண்மையை சொல்ல வேண்டும் என நினைக்கிறான். இப்படியான நிலையில், அடுத்து நடிக்க போவது என்ன என்பது பற்றி அறிய... கார்த்திகை தீபம் சீரியல் பற்றிய அப்டேட் தெரிந்து கொள்ள கார்த்திருப்போம்.