MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாரிஜாதம் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோ... காரணம் என்ன தெரியுமா?

பாரிஜாதம் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோ... காரணம் என்ன தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாரிஜாதம்' என்கிற சீரியலில் விஷால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரக்‌ஷித் அதிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 18 2026, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rakshit Who Acted as Vishal Quit Parijatham Serial
Image Credit : instagram

Rakshit Who Acted as Vishal Quit Parijatham Serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பாரிஜாதம் சீரியல். இந்த சீரியலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இந்த தொடரில் நடித்து வந்தவர் தான் ரக்‌ஷித். இவர் விஷால் என்கிற கேரக்டரில் நடித்து வந்தார். இந்த சீரியல் தொடங்கி இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ரக்‌ஷித். அவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விலகிய கையோடு பாரிஜாதம் சீரியல் பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் ரக்‌ஷித்.

24
விலகிய பாரிஜாதம் ஹீரோ
Image Credit : instagram

விலகிய பாரிஜாதம் ஹீரோ

அதில் "நன்றியுணர்வுடனும், உணர்ச்சிமிக்க இதயத்துடனும் பாரிஜாதத்தில் விஷாலாக நடித்த என் பயணத்தை முடித்துக் கொள்கிறேன். விஷால் என்பவர் வெறும் கதாபாத்திரம் மட்டுமல்ல... அவர் என் ஒரு பகுதியாகவே மாறிவிட்டார். அவரது உணர்வுகள், வலிமை, அன்பு, போராட்டங்கள் மூலம் என் வாழ்வின் அழகான அத்தியாயத்தை வாழ்ந்தேன். நான் நடித்த ஒவ்வொரு காட்சியிலும், பேசிய ஒவ்வொரு வசனத்திலும் என் இதயத்தின் ஒரு பகுதி இருந்தது. என் அன்பான ரசிகர்களே - விஷாலுக்கு நீங்கள் காட்டிய அன்பும், அனுப்பிய செய்திகளும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதவை” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
TRP ratings: தலைகீழாக மாறிய டிஆர்பி ராஜ்ஜியம்.! விஜய் டிவி கோட்டையில் ஓட்டை?! ஜீ தமிழ் சீரியல்கள் செய்த மேஜிக்!
Related image2
அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 தமிழ் சீரியல்கள்... சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் லீடிங் யார்?
34
ரக்‌ஷித்தின் நெகிழ்ச்சி பதிவு
Image Credit : instagram

ரக்‌ஷித்தின் நெகிழ்ச்சி பதிவு

மேலும், பார்வையாளர்களின் ஆசீர்வாதத்தால்தான் ஒரு கலைஞன் உயிர்வாழ்கிறான். இந்த பயணத்தை நீங்கள் என்னால் மறக்க முடியாததாக்கினீர்கள். தனது இணை கலைஞர்களுக்கு திரையிலும் திரைக்கு வெளியேயும் பகிர்ந்து கொண்ட அழகான உறவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்த ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் - நிகழ்ச்சியின் உண்மையான முதுகெலும்பு என்று பாராட்டியுள்ளார். தொலைக்காட்சி சேனல் மற்றும் முழு குழுவினருக்கும் நம்பிக்கை மற்றும் வாய்ப்பளித்ததற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

44
விலகலுக்கு காரணம் என்ன?
Image Credit : instagram

விலகலுக்கு காரணம் என்ன?

"விஷாலின் பயணம் என்னுடன் இங்கே முடிந்தாலும், நினைவுகளும், பாடங்களும், அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கும். இது விடைபெறுதல் அல்ல... இது முடிவும் அல்ல... இது ஒரு புதிய தொடக்கம் மட்டுமே" என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவுக்கு ரசிகர்கள் பெரும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். பாரிஜாதம் தொடரில் விஷால் கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இனி ரக்‌ஷித்துக்கு பதில் அந்த சீரியலில் விஷாலாக நடிக்கப்போவது யார் என்பது விரைவில் தெரியவரும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image2
உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Related Stories
Recommended image1
TRP ratings: தலைகீழாக மாறிய டிஆர்பி ராஜ்ஜியம்.! விஜய் டிவி கோட்டையில் ஓட்டை?! ஜீ தமிழ் சீரியல்கள் செய்த மேஜிக்!
Recommended image2
அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 தமிழ் சீரியல்கள்... சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் லீடிங் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved