MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விஜயாவின் எதிர்ப்பை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் ஹைலைட்ஸ்

விஜயாவின் எதிர்ப்பை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் ஹைலைட்ஸ்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, சிந்தாமணியை எதிர்த்து பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 03 2026, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் சங்கத்தில் எலெக்‌ஷன் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் சிந்தாமணி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து மீனா களம் காண்கிறார். இதற்காக மீனா வேட்புமனு தாக்கல் செய்த விஷயம் அறிந்த சிந்தாமணி, உடனடியாக விஜயாவை போன் போட்டு வர வைத்து அவரிடம் மீனா மட்டும் தலைவி ஆனால், உங்க வீட்டில் உங்களுக்கான மவுசு குறைந்துவிடும், இனி அது தலைவி மீனா வீடாக மாறிவிடும் என ஏத்திவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
விஜயாவை உசுப்பேற்றிவிட்ட சிந்தாமணி
Image Credit : jiohotstar

விஜயாவை உசுப்பேற்றிவிட்ட சிந்தாமணி

மீனா மட்டும் ஜெயித்து தலைவி ஆகிவிட்டால் உனக்கு வீட்டில் மரியாதையே போயிடும், என சிந்தாமணி சொன்னதும், விஜயா கற்பனை பண்ணி பார்க்கிறார். மீனாவை பார்க்க ஆட்கள் எல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு விஜயா தன் கையால் காஃபி போட்டு வந்து கொடுக்கிறார். இதை யோசித்து பார்த்த விஜயா, மீனாவை தலைவி ஆகவிடக் கூடாது என்கிற முடிவோடு, கோபமாக வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு விஜயா வரும் முன் மீனாவும், முத்துவும் வந்து வீட்டில் உள்ளவர்களிடம் மீனா தேர்தலில் நிற்கப் போகும் விஷயத்தை கூறி அனைவருக்கும் தாங்கள் வாங்கி வந்த ஸ்வீட்டை கொடுக்கிறார்கள்.

Related Articles

Related image1
சிந்தாமணிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் மீனா... வில்லியாக மாறும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா... ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
35
விஜயாவின் பேச்சுக்கு மதிப்பில்லை
Image Credit : jiohotstar

விஜயாவின் பேச்சுக்கு மதிப்பில்லை

அந்த நேரத்தில் விஜயா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அத்தையை பார்த்ததும், அவரிடம் ஸ்வீட்டை கொண்டுபோய் நீட்டுகிறார் மீனா. அதை எடுக்காமல், தட்டிவிடுகிறார் விஜயா. இதைப்பார்த்த முத்து செம கோபம் அடைகிறார். நீ இந்த எலெக்‌ஷன்ல நிற்க கூடாது. ஒழுங்கா இந்த வீட்டுல மருமகளா மட்டும் இரு. நான் சொல்றத கேட்டு நடந்தால் தான் நீ இந்த வீட்டுல இருக்கணும் இல்லேனா இங்க நீ இருக்க முடியாது என காட்டமாக சொல்கிறார் விஜயா. அவர் என்ன சொன்னாலும் மீனாவுக்கு தான் வீட்டில் நிறைய சப்போர்ட் இருக்கிறதே. அதனால் விஜயா எவ்வளவு கத்தினாலும் கடைசியில் அது எடுபடாமல் போய் விடுகிறது.

45
மீனாவுக்கு பெருகும் ஆதரவு
Image Credit : jiohotstar

மீனாவுக்கு பெருகும் ஆதரவு

பின்னர் விஜயா ரூமுக்குள் சென்ற பின்னர், மீனாவிடம் பேசும் அண்ணாமலை, மீனா நீ இந்த தேர்தல்ல நிக்குற, உனக்கு என்னோட முழு ஆதரவை தருகிறேன். என்னோட ஆசிர்வாதமும் உனக்கு எப்பவும் உண்டு என சொல்கிறார். மறுபுறம் முத்துவும், மீனாவிடம் நீ அம்மா சொல்றதையெல்லாம் கேட்காத, நீ நில்லு நான் உன்னைய ஜெயிக்க வைக்குறேன் என சொல்கிறார். அதன்பின்னர் நோட்டீஸ் அடிப்பது தொடர்பாக முத்துவும் மீனாவும் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். அதில் என்னவெல்லாம் எழுத வேண்டும், என்பதை கலந்து ஆலோசித்து இருவரும் அதற்கான வேலைகளில் இறங்குகிறார்கள்.

55
சோகத்தில் மனோஜ்
Image Credit : jiohotstar

சோகத்தில் மனோஜ்

அதேநேரத்தில் மனோஜ், ஷோரூமில் சோகமாக அமர்ந்திருக்கிறார். அடுத்த கல்யாணம் பண்ணுவதற்கு பெண் கிடைக்காத சோகத்தில் இருக்கிறார் மனோஜ். அப்போது ஜீவாவுக்கு மேட்ரிமோனியில் இருந்து போன் வருகிறது. அதையெடுத்து பேசிய ஜீவா, அதன்பின் மனோஜிடம் வந்து, உங்களுக்கு முதல்ல டைவர்ஸ் ஆகட்டும், அதுக்கப்புறம் தான் பொண்ணு பார்க்க முடியும்னு மேட்ரிமோனியில் சொல்லிவிட்டார்கள் என கூறுகிறார் ஜீவா. அப்போது அருகில் இருந்த மொட்டை சந்தோஷ், நம்ம ஸ்டேட்ல பொண்ணு பார்த்தா தான இந்த பிரச்சனை, பேசாம வட இந்தியாவில் இருந்து பொண் பார்க்கலாம் என சொல்லி கிண்டல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிங்கப்பெண்ணே ப்ரோமோ: துளசியின் சதி.. சேதுவின் தில்லுமுல்லு:ரத்த வெள்ளத்தில் ஆனந்தி!
Recommended image2
அதிக TRP ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?
Recommended image3
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?
Related Stories
Recommended image1
சிந்தாமணிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் மீனா... வில்லியாக மாறும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா... ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved