- Home
- Cinema
- தொலைக்காட்சி
- காட்டுத்தீபோல் பரவிய ரோகிணி மேட்டர்... பார்வதி - விஜயா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை அப்டேட்
காட்டுத்தீபோல் பரவிய ரோகிணி மேட்டர்... பார்வதி - விஜயா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி செய்த ஃபிராடு வேலையால், அவமானத்தில் வெளியே தலைகாட்ட முடியாமல் இருக்கும் விஜயா, பார்வதியுடன் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி இத்தனை நாட்களாக ஏமாற்றிய விஷயம் அனைவருக்கும் தெரியவந்திருப்பதை அடுத்து, பல்வேறு எதிர்பாரா ட்விஸ்டுகள் நடக்கிறது. வீட்டை விட்டு போகும்போது மீனாவை மாட்டிவிட்டு சென்றிருக்கிறார் ரோகிணி. இதனால் குற்ற உணர்ச்சியில் சாப்பிடாமல் இருந்து மயக்கம் போட்டு விழுந்துள்ளார் மீனா. பின்னர் அண்ணாமலை அவருக்கு அட்வைஸ் பண்ணியதை அடுத்து, முத்துவும் மீனாவும் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பார்வதியிடம் சண்டைபோடும் விஜயா
விஜயா, பார்வதியின் வீட்டிற்கு சென்று, அவருடன் சண்டை போடுகிறார். அந்த ரோகிணியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே நீ தான், உன்னால் தான் நாங்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்று சொல்லி தாம் தூம் என குதிக்கிறார். இதனால் கடுப்பாடும் பார்வதி, இதுல என்னோட தப்பு என்ன இருக்கு என கேட்க, மலேசியாவில் அவளோட அப்பா பெரிய கோடீஸ்வரன்னு சொன்னால்ல என விஜயா சொல்ல, பார்த்தியா நீயே ஒத்துக்கிட்ட, நீதான் பேராசப்பட்டு அவளை உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச, அப்போ நீ தான இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம் என சொல்கிறார் பார்வதி.
விஜயாவுக்கு பதிலடி கொடுத்த பார்வதி
நீ அவளை கூட்டிட்டு வந்து எனக்கு அறிமுகப்படுத்தாம இருந்திருந்தா நான் என்னோட பையனை அவளுக்கு அறிமுகப்படுத்திருக்க மாட்டேன் என கூறுகிறார் விஜயா. அந்த பார்லர்காரி இனிமே எனக்கு எந்த பிரச்சனையும் பண்ணக்கூடாது. அவ என்னோட பையன் வாழ்க்கையை விட்டே போயிடனும். நீ தான் அவகிட்ட பேசி இந்த ஊரைவிட்டு போக வைக்கணும். அவ இங்க இருந்து நாலுபேர் பார்க்க பார்க்க எனக்கு தான் அசிங்கம் என விஜயா சொல்ல, நான் எப்படி அவளை ஊரைவிட்டு போக சொல்ல முடியும் என பார்வதி கேட்கிறார். அதற்கு விஜயா, எனக்கு முன்னாடியே உனக்கு அவளைப் பற்றி தெரியும்ல என விஜயா சொல்ல, அந்த மாதிரி மட்டமான புத்தியெல்லாம் எனக்கு இல்ல விஜயா என பதிலடி கொடுக்கிறார் பார்வதி.
ஃபீல் பண்ணும் மனோஜ்
பின்னர் வீட்டு வரும் விஜயா, ரூமுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் மனோஜிடம், உன்னை இப்படி பார்க்கவே எனக்கு பயமா இருக்குடா என சொல்ல, ரோகிணி இப்படி ஏமாத்திட்டாலேமா என ஃபீல் பண்ணி அழுகிறார் மனோஜ். அவளை மறந்துவிடு, இனிமே அவள் உன் வாழ்க்கையில் கிடையாது. நான் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கிறேன். நீ எப்பவும் அவளையே நினைச்சிட்டு இருக்காம, அடுத்த வேலை என்னவோ அதைப்பாரு என சொல்கிறார் விஜயா. பின்னர் வீட்டுக்கு வரும் அண்ணாமலையிடம் மனோஜுக்கு டைவர்ஸ் வாங்குவது பற்றி பேசுகிறார் விஜயா.
சத்தம் போட்ட ஸ்ருதியின் அம்மா
இதையடுத்து ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வருகிறார். அவர் வந்ததும் ரோகிணி விஷயம் கேள்விப்பட்டேன், இப்படி ஊர் பேரு தெரியாதவளை மருமகளா கொண்டுவந்திருக்கீங்க என சத்தம் போடுகிறார். அவ எங்களை நம்பவச்சு ஏமாத்திட்டா என விஜயா சொல்ல, அவ பணக்காரினு சொன்னதும் என்ன ஏதுனு விசாரிக்காம உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு நீங்க தான் ஏமாந்துட்டீங்க என ஸ்ருதியின் அம்மா திட்டுகிறார். விஷயம் தெரிந்ததும் உங்க மாப்பிள்ள வீட்ல இப்படி ஆகிடுச்சுனு எல்லாரும் எனக்கு போன் பண்ணி துக்கம், விசாரிக்கிறாங்க. ஒரே அவமானமா இருக்கு என சொல்கிறார் ஸ்ருதியின் அம்மா. இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

