- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பழிவாங்க துடிக்கும் ரோகிணி; சொத்தை ஆட்டையப்போட பார்க்கும் சிந்தாமணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
பழிவாங்க துடிக்கும் ரோகிணி; சொத்தை ஆட்டையப்போட பார்க்கும் சிந்தாமணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு அடைக்கலம் கொடுத்துள்ள சிந்தாமணி, அவரை வைத்து விஜயாவின் வீட்டை எழுதி வாங்க திட்டமிட்டு இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி இத்தனை நாட்களாக தங்களையெல்லாம் ஏமாற்றியதால், கோபத்தில் அவரை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளார் மனோஜ். இதையடுத்து அடைக்கலம் தேடி தோழிகளின் வீட்டுக்கு சென்ற ரோகிணிக்கு, மகேஸ்வரி, வித்யா ஆகியோர் நோ சொல்லிவிட, இறுதியாக சிந்தாமணியிடம் ஐக்கியம் ஆகி இருக்கிறார் ரோகிணி. அவர் உனக்கு எவ்வளவு நாள் இங்க இருக்கனுமோ இருந்துக்கோ என சொல்லி தன்னுடனே தங்கவைத்துக் கொள்கிறார். மறுபுறம் ரோகிணி ஏமாற்றியதை நினைத்து மனோஜ் ஃபீல் பண்ணுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மயங்கி விழுந்த மீனா
ரோகிணி ஏமாற்றியதால் கதறி அழும் மனோஜ், கோபத்தில் ரூமுக்குள் கத்துகிறார். இதைக்கேட்டு பதறி ஓடி வந்த விஜயா, என்னடா ஆச்சு என கேட்க, அவரிடம் ரோகிணி இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கலம்மா என ஃபீல் பண்ணி அழுகிறார். அவரை ஆசுவாசப்படுத்தும் விஜயா, அவ பண்ண தப்புக்கு நீ ஏண்டா அழுகுற என கேட்கிறார். மறுபுறம் முத்து தன்மீது கோபத்தில் இருப்பதால், அதை நினைத்துக் கொண்டே ரோட்டில் நடந்து செல்லும் மீனா, கார் ஒன்றில் தவறி விழப்பார்க்கிறார். அந்த கார் டிரைவர் உடனே பிரேக் போட்டு நிறுத்திவிட, அப்போது அந்த வழியாக வந்த ஸ்ருதி மற்றும் ரவி என்ன ஆச்சு என மீனாவிடம் கேட்க, அவர் அப்படியே மயங்கி விழுந்துவிடுகிறார்.
சமாதானம் ஆகும் முத்து
பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அவருடைய அம்மா வீட்டுக்கு அழைத்து செல்கிறார் ஸ்ருதி. அங்கு அவரிடம் நீங்க சாப்பிடாம இருப்பதால் தான் இப்படியெல்லாம் நடக்குது, சாப்பிடுங்க என சொல்ல, மீனா சாப்பிட மறுக்கிறார். பின்னர் முத்து வந்து திட்டுகிறார். அப்போதும் சப்பிட முடியாது என சொல்லிவிடுகிறார். இதையடுத்து அண்ணாமலையை போன் போட்டு வரவைக்கின்றனர். அவர் வந்ததும் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் மீனா. பின்னர் சீதா அங்கு வந்து மீனாவை கட்டிப்பிடித்து பழைய பகையெல்லாம் மறந்து பேசுகிறார். இதையடுத்து ரூமுக்குள் சென்று பேசும் முத்து - மீனா இருவரும் ஒன்றாக சாப்பிடுகின்றனர்.
ரோகிணியின் அடுத்த பிளான்
மறுபுறம் சிந்தாமணி வீட்டில் தங்கி இருக்கும் ரோகிணி, நன்கு ரெஸ்ட் எடுத்துவிட்டு கீழே இறங்கி வந்ததும், அவரிடம் அடுத்து என்ன பண்ணப்போற என கேட்கிறார் சிந்தாமணி. அதற்கு அவர், எனக்கு மனோஜ் வேணும், என்னை இந்த நிலைக்கு ஆளாக்குன அந்த முத்துவையும், மீனாவையும் பழிவாங்காம விடமாட்டேன் என கூறுகிறார். நீ இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என சொல்லும் சிந்தாமணி, இங்கு இருந்தால் விஜயாவுக்கு விஷயம் தெரிந்துவிடும். நீ என்னோட இன்னொரு வீட்டில் தங்கி இரு என கூறுகிறார். அதற்கு ரோகிணியும் ஓகே சொல்கிறார்.
சிந்தாமணி போடும் ஸ்கெட்ச்
பின்னர் ரோகிணி மாடிக்கு சென்றதும், சிந்தாமணியிடம் வேலை பார்க்கும் நபர் ஒருவர் நீங்க எதுக்காக இந்த பொண்ணுக்கு இவ்ளோ உதவி பண்ணுறீங்கனு புரியல என சொல்ல, அதற்கு அவர் இவளோட புருஷன் மனோஜ் இப்போ கடன் பிரச்சனையில இருக்கான். அவனுக்கு பணம் கொடுத்து உதவி பண்ணிட்டு, அதற்கு அதிக வட்டி போடுவோம், கடனை திருப்பி தரலேனு சொல்லி அவனோட வீட்டை எழுதி வாங்கிடுவோம். அந்த வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக தான் நான் விஜயாவிடம் யோகா கிளாசுக்கே சென்றேன் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் சிந்தாமணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

