- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணியை டைவர்ஸ் பண்ண சொன்ன விஜயா... மனோஜ் எடுக்கப்போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
ரோகிணியை டைவர்ஸ் பண்ண சொன்ன விஜயா... மனோஜ் எடுக்கப்போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மீனாவை மாட்டிவிட்டு சென்ற நிலையில், அவரை முத்து, விஜயா, ஸ்ருதி ஆகியோர் திட்டி இருக்கின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தருணம் அரங்கேறி இருக்கிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் அனைத்தும் முத்துவுக்கு தெரியவந்ததை அடுத்து, அதை அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டுடைத்து உள்ளார். இதையடுத்து ரோகிணியை அடித்து வெளியே துரத்திவிடுகிறார் மனோஜ். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் மீனாவுக்கு தன்னைப் பற்றிய உண்மைகள் முன்கூட்டியே தெரியும் என்கிற விஷயத்தையும் போட்டுக்கொடுத்துவிட்டு செல்கிறார் ரோகிணி. இதனால் மீனா மீது கோபம் கொள்கிறார் முத்து. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
திட்டுவாங்கும் மீனா
ரோகிணியை தொடர்ந்து குடும்பத்தாரிடம் திட்டுவாங்குகிறார் மீனா. நீங்க ரெண்டு பேருமே கூட்டுக் களவாணிகள் தானா என விஜயா கேட்பது மட்டுமின்றி, ரோகிணியை போல் இவளையும் இந்த வீட்டை விட்டு விரட்டிவிட வேண்டும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி நீங்க கூட்டிட்டு வந்த மருமகள் இப்போ உங்களிடமே உண்மையை சொல்லாம மறைச்சிருக்கா என அண்ணாமலையையும் கேட்கிறார் விஜயா. இதையடுத்து மீனா மன்னிப்பு கேட்டும், அதை முத்து, அண்ணாமலை என யாரும் ஏற்கவில்லை. பின்னர் கண்கலங்கியபடி நிற்கிறார் மீனா, அனைவரும் கோபத்துக் கொண்டு ரூமுக்கு சென்றுவிடுகிறார்கள்.
ரோகிணிக்கு அடைக்கலம் தர மறுக்கும் தோழிகள்
மறுபுறம் வீட்டை விட்டு துரத்திவிடப்பட்ட ரோகிணி, நேராக தன்னுடைய தோழி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று தனது நிலையை எடுத்துக் கூறுகிறார். அதுமட்டுமின்றி இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் இங்கே தங்கிக் கொள்ளவா என கேட்க, அதற்கு மகேஸ்வரி சம்மதம் தெரிவித்தாலும், அவருடைய கணவர் மகேஸ்வரியை தனியாக அழைத்துச் சென்று பேசுகையில், ரோகிணி இந்த வீட்டில் இருந்தால் நமக்கு தான் பிரச்சனை. நாளைக்கே கோர்ட், கேஸ்னு வந்தா போலீஸ் உன்னையும் தான் விசாரிப்பாங்க. எதுக்கு வேண்டாத வம்பு, அதனால் அவங்க இங்க இருக்க வேண்டாம் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து ரோகிணி, தன்னுடைய மற்றொரு தோழியான வித்யா வீட்டுக்கு செல்கிறார்.
விஜயா எடுத்த முடிவு என்ன?
வித்யாவின் கணவரும் ரோகிணிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிடுகிறார். ஏனெனில் முத்துவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் தப்பா நினைப்பார் என சொல்லி ரோகிணியை இங்கே தங்க வைக்க முடியாது என கூறிவிடுகிறார். மறுபுறம் மனோஜ் வீட்டில், ரோகிணி தன்னை ஏமாற்றிய சோகத்தில் தனது கல்யாண போட்டோ, ஆல்பம் என அனைத்தையும் எடுத்து உடைகிறார். கோபத்தில் கத்துகிறார். மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய ரோகிணியை டைவர்ஸ் பண்ணி விட்டுறலாம் என முடிவு செய்கிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

