- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores: சைலண்டாக மாப்பிள்ளை பார்த்து - நிச்சயதார்த்த தேதி குறித்த பாண்டியன்! அரசி சொன்ன வார்த்தை?
Pandian Stores: சைலண்டாக மாப்பிள்ளை பார்த்து - நிச்சயதார்த்த தேதி குறித்த பாண்டியன்! அரசி சொன்ன வார்த்தை?
காதல் வலையில் சிக்கிக் கொண்ட அரசிக்கு, பாண்டியன் மாப்பிள்ளை பார்த்துவிட்டு வந்ததோடு மட்டுமின்றி திருமண நிச்சயதார்த்த தேதியும் குறித்துவிட்டு வந்ததாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்றைய 439ஆவது எபிசோடானது அரசியின் கல்வி தொடர்பான காட்சிகளுடன் தொடங்குகிறது. கோமதி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். அதன்படி, அவர் கல்லூரிக்கு போகவும் வேண்டாம், படிக்கவும் வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு மீனா, மயில் எதிர்ப்பு தெரிவிக்க.. உங்களுக்கு மகள் பிறக்கும் போது அப்போ நீங்க உங்க இஷ்டத்துக்கு இருந்துக்கோங்க. இப்போது இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லி விடுகிறார்.
அக்கா மகனுக்கு மகளை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பாண்டியன்:
இதையடுத்து, பாண்டியன் தனது அக்காவின் வீட்டிற்கு சென்று அரசிக்கும், சதீஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். வரும் போது வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறார்.
Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!
அரசிக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி பேசும் பாண்டியன்:
எல்லோருமே சாப்பிட்டு முடித்ததும் அரசிக்கு ஏற்பாடு செய்த திருமண நிச்சயதார்த்தம் பற்றி சொல்கிறார். அதற்கு சுகன்யாவோ இப்போது எதுக்கு அரசிக்கு திருமணம் என்று கேட்கவே, அதற்கு இப்போ கல்யாணம் செய்து வைக்க வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும். இனி எவனையாவது இழுத்து ஓடட்டும், குடும்பத்தோடு எல்லோரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று வெறுப்பாக பேசினார் கோமதி.
திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் அரசி
இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொன்றாக பேச கடைசியில் பாண்டியன் தனது மகளிடம் கேட்கிறார். அரசி உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார் என்று கூற... நீங்க என்ன முடிவு பண்ணாலும் எனக்கு சம்மதம். எனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் என சொல்வதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளை பெண் பார்க்கும் படலம் நடக்குமா?
நாளையை எபிசோடில் அரசிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை தொடர்பான காட்சிகள் இடம் பெறலாம் என தெரிகிறது. அல்லது அவர் பெண் பார்க்கும் போது கூட எண்ட்ரி கொடுக்கலாம். இதே போன்று நாளைய 440ஆவது எபிசோடில் குமரவேலுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படி இருக்கும் போது அரசி மற்றும் குமரவேல் இருவரும் திருமணம் செய்து கொள்வாரகளா என்ற கேள்வியும் எழுகிறது.
சுகன்யாவின் சூழ்ச்சி நிறைவேறுமா?
ஏனென்றால், இருவருக்கும் இப்போது பெண் மற்றும் மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடைபெறுகிறது. இது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அப்படியிருக்கும் போது சக்திவேல் கூறியது போன்று குமரவேல் அரசியை திருமணம் செய்து கொள்வாரா? அல்லது யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் இதில் இருக்குமா? சுகன்யா சூழ்ச்சி செய்து அரசி மனசை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.