Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 436ஆவது எபிசோடானது அரசி மற்றும் பாண்டியன் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சியில் தொடங்கி, யாரும் வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியில் செல்லும் காட்சியுடன் முடிவடைகிறது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இன்றைய 436ஆவது எபிசோடானது பாண்டியனிடம் அரசி பேசுவது போன்ற காட்சிகளுடன் தொடங்கியது. தன்னை மன்னித்துவிடும்படி கேட்டு கதறி அழும் அரசி, அவரு என்று குமாரவேல் பற்றி பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் ரொம்ப நாட்களாக என்னிடம் பேச முயற்சித்த நிலையில் நானும் அவரிடம் பேசவில்லை. அப்போது தான் நம் இருவரது குடும்பமும் ஒன்று சேர வேண்டுமானால் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் நம் குடும்பம் ஒன்று சேரும் என்று கூறியதாக சொல்கிறார்.
கோமதி சொன்ன வார்த்தை
மேலும், காந்திமதி அப்பத்தா உங்க அம்மாவை நினைத்தும், உங்களது குடும்பத்தை நினைத்து நாள்தோறும் வருத்தப்படுவதாக குமாரவேல் கூறியதாக சொன்னார். அதனால் தான் நான் பழகினேன். அதற்கு கோமதி எனக்கு திருமணம் நடந்து 30 வருடங்களாகியும் நானும் நல்லாதான் இருக்கேன். பாட்டியும் நல்லாதான் இருக்காங்க. அம்மாவிடமும், பேசவில்லை, அண்ணன்களிடமும் பேசவில்லை. இனிமேலும் பேசாமல் இருக்க முடியும் என்று கோமதி அரசிக்கு புத்திமதி கூறினார்.
பழனிவேல் சொன்ன அறிவுரை
அப்போதுதான் பழனிவேல் அரசி உங்க அம்மா கல்யாணத்தில் வந்த விரிசில், ராஜீ கதிர் கல்யாணத்தில் அதிகமாச்சு. அப்படியிருக்கும் போது நீயும், குமாரும் கல்யாணம் பண்ணா விரிசல் அதிகமாத்தான் ஆகும். உன்னை ஏமாற்றவே அவன் அப்படியொரு நாடகத்தை நடத்தியிருக்கிறான் என்று அறிவுரை வழங்கினார்.
படிப்பை நிறுத்த சொல்லும் கோமதி
இனிமேல் நீ காலேஜூக்கும் போக வேண்டாம். படிக்கவும் வேண்டாம், நீ பண்ண வரை போதும், வீட்டு படிய தாண்ட கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் கோமதி. இதையடுத்து கதிர் மற்றும் செந்தில் ஆகியோரிடம் சென்று தன்னை மன்னிக்கும் படி சொல்கிறாள். மேலும் பாண்டியன் மற்றும் கோமதி ஆகியோரது தலையில் அடித்து சத்தியம் செய்ததோடு இனிமேல் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பதாக வாக்குறுதி அளிக்கிறார் அரசி.
மயக்கம் போட்டு விழுந்த அரசி
அப்போது அரசி திடீரென்று மயக்கம் போட்டு விழவே, எல்லோரும் என்னாச்சு, ஏதாச்சு என்று பதறும் நிலையில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. இதையடுத்து பாண்டியன் அரசியை அழைத்து பேச ஆரம்பிக்கிறார். உனக்கு என்ன குறை வைத்தேன், எப்படியெல்லாம் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டேன். அவங்க குடும்பத்த பத்தி தானே ஏற்கனவே தெரியும், உங்க அண்ணனை அடிச்சான், அண்ணிகளை கடத்தினான் என்றெல்லாம் பேசி புரிய வைக்கிறார். கடைசியில் ஒரு முடிவு எடுத்து யாரும் வேலைக்கு போக வேண்டாம் என சொல்கிறார் பாண்டியன்.
தங்க மயிலுக்கு பிறந்த விடிவுகாலம்
நான் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் புறப்பட்டு செல்கிறார் அதோடு இன்றைய எபிசோடு முடிகிறது. பாண்டியன் எடுத்த இந்த முடிவு, இதுவரை ஆபீஸ் வேலைக்கு போகிறேன் என ஹோட்டலில் வெயிட்டர் வேலைக்கு சென்று கொண்டிருந்த, தங்க மயிலுக்கு நிம்மதியை கொடுத்திருந்தாலும்... ராஜீ, மீனா விஷயத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.