- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சன் டிவி மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. விக்ரமின் 'தில்', ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவ கேட்ட சிவா' ஆகியவற்றுடன், விஜய் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த அப்டேட்
வார இறுதியில் குடும்பத்துடன் சேர்ந்து பழைய ஹிட் திரைப்படங்களை டிவியில் பார்ப்பது பலருக்கும் பிடித்த பொழுதுபோக்காக இருக்கிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு அது ஒரு சிறிய திருவிழாவைப் போல மாறிவிடும். இந்த வாரமும், சன் டிவி ரசிகர்களை குஷிப்படுத்திய மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப தயாராகியுள்ளது. அதிலும், விஜய் நடித்த மாஸ் ஹிட் படம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும் தேர்தலுக்கு பிறகு விஜய் படம் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

சன் டிவி திரைப்படங்கள்
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தில் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. விக்ரம், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த ஆக்ஷன்-என்டர்டெய்னர் படம், இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. விக்ரமின் மாஸ் காட்சிகளும், விவேக்கின் காமெடியும் இந்த படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் ஒளிபரப்பாகும் விஜய் படம்
இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பது தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் போக்கிரி திரைப்படம். விஜய் தனது ஸ்டைல், மாஸ் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த இந்த படம், டிவியில் ஒளிபரப்பானாலும் TRP-யை தெறிக்கவிடும் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அசின் உடன் விஜயின் கெமிஸ்ட்ரியும், வடிவேலு காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. “ஒரு தடவை முடிவு பண்ணிட்டா...” போன்ற வசனங்கள் இன்றும் வைரலாக பேசப்படுகின்றன.
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
மாலை 6.30 மணிக்கு மொட்ட சிவ கேட்ட சிவா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த இந்த படம் ஆக்ஷன், காமெடி கலவையுடன் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை கொடுக்கும். குடும்பத்துடன் சேர்ந்து வார இறுதியை சினிமா கொண்டாட்டமாக மாற்ற இந்த மூன்று படங்களும் சரியான தேர்வாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர். சமீப காலமாக தொலைக்காட்சிகளில் பழைய சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் ஒளிபரப்பாகி வருவது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக போக்கிரி போன்ற விஜய் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் தொடங்கி விடுவது வழக்கம்.

