- Home
- Astrology
- Astrologer: தவறு நடந்தால் பதவியை தூக்கி எறிவார்! விஜய் ஆட்சி கவிழுமா? 2028 வரை இருக்கும் சவால்கள்! ஜோதிடர் கணிப்பு!
Astrologer: தவறு நடந்தால் பதவியை தூக்கி எறிவார்! விஜய் ஆட்சி கவிழுமா? 2028 வரை இருக்கும் சவால்கள்! ஜோதிடர் கணிப்பு!
Astrologer Shelvi: நடிகர் விஜய் முதல்வரானதன் பின்னணியில் உள்ள ஜோதிட ரகசியங்களை ஜோதிடர் ஷெல்வி விளக்குகிறார். பராபவ வருடத்தின் சிறப்பு, பதவியேற்பு காலத்தின் கிரக நிலைகள், மற்றும் 2028 வரை அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்.

ஜோதிடர் ஷெல்வி
கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே, தமிழக அரசியலில் 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். இந்த அசாத்திய அரசியல் புரட்சியின் பின்னணியில் உள்ள ஜோதிட ரகசியங்களையும், வரவிருக்கும் சவால்களையும் ஜோதிடர் ஷெல்வி விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
பராபவ வருடத்தின் பலனும் 'விஜய்' என்ற ஒற்றை முகமும்!
ஜோதிட பஞ்சாங்க அமைப்பில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய மிக வலிமை வாய்ந்த 'பராபவ வருடம்' இதுவாகும். இந்த ஆண்டின் சிறப்பால் வேட்பாளர்கள் யார் என்றே தெரியாமல், மக்கள் 100% முழுக்க முழுக்க விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மட்டுமே வாக்களித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

அவசரமாகப் பதவியேற்றது ஏன்?
ஏப்ரல் 14 முதல் மே 14 வரையிலான சித்திரை மாதத்தில், கடக ராசி லக்னத்திற்கு 10-ஆம் இடத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த உச்ச காலத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது ராஜயோகத்தை தரும் என்பதால் தான் மே 14-க்குள் விஜய் அவசரமாகப் பதவியேற்றார். அஷ்டமி திதியைச் சிலர் எதிர்மறையாகப் பார்த்தாலும், அது பெரிய வெற்றிகளையும் அதிர்ஷ்டத்தையும் தரவல்லது. மேலும், சதய நட்சத்திரம் (ராகு நட்சத்திரம்) முடிந்து பூராடம் (குரு நட்சத்திரம்) வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதற்கு முன்பே பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.
9 அமைச்சர்கள் & சிவப்பு கயிறு
ஜெயலலிதா பாணியில் செவ்வாயின் ஆதிக்கத்தைக் குறிக்கும் '9' என்ற எண்ணிக்கையில் முதல்கட்டமாக ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். விஜய் கையில் கட்டியிருக்கும் சிவப்பு கயிறு ராகுவின் ஆதிக்கத்தைக் குறிப்பதுடன், அவருக்குப் பேராற்றலையும் பாதுகாப்பையும் வழங்கும். ஏப்ரல் 23 வரை ராகு புத்தியும், அதன் பின் குரு புத்தியும் நடப்பதால் நிர்வாகத்தில் சில சிறு தடைகளும் சிக்கல்களும் எழும். இந்த கிரக அமைப்பு 2028-ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்பதால், குறிப்பாக 2027 ஜனவரி 28 வரை விஜய் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். அதன் பிறகு சனி புத்தி தொடங்கும். தற்போது விஜய்க்குச் சுக்கிர திசை நடப்பதால், அவரது ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு அறவே இல்லை.
தமிழக அரசியலின் 'மூன்று முகங்கள்' மற்றும் விஜய்யின் அதிரடி
எதிர்காலத் தமிழக அரசியல் என்பது விஜய், உதயநிதி, அண்ணாமலை ஆகிய மூன்று முக்கிய முகங்களைச் சுற்றி மட்டுமே சுழலும். விஜய்யின் ஆட்சி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு அவரது ஆட்சியில் இடமிருக்காது. தவறு செய்யும் அமைச்சர்களை ஒரு நொடியில் தூக்கியடிக்கும் குணம் விஜய்க்கு உண்டு. நிர்வாகம் அவர் நினைத்தபடி சீராக நடக்காவிட்டால், "அரசியலே வேண்டாம்" என்று அசால்ட்டாகத் தூக்கிப்போடும் கிரக அமைப்பும் அவருக்கு உள்ளது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை
முதல்வர் விஜய் அவர்கள் மக்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பில் இருப்பார். இருப்பினும், பணிச்சுமை காரணமாக அதிக அழுத்தம் (Stress) மற்றும் கோபத்தைத் தவிர்த்து, உணவுக் கட்டுப்பாட்டுடன் தனது ஆரோக்கியத்தை அவர் கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம் என்று ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார்.

