- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படுதோல்விக்கு பின் சின்னத்திரைக்கு தாவிய வனிதா... அட்ரசக்க இந்த சீரியலில் நடிக்கிறாரா?
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படுதோல்விக்கு பின் சின்னத்திரைக்கு தாவிய வனிதா... அட்ரசக்க இந்த சீரியலில் நடிக்கிறாரா?
நடிகை வனிதா விஜயகுமார் அண்மையில் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அவர் தற்போது சீரியலுக்கு தாவி இருக்கிறார்.

Vanitha as Saroja in Zee Tamil Serial
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சினிமாவில் நடித்து ஃபேமஸ் ஆனதை விட சர்ச்சைகளில் சிக்கி தான் அதிகளவில் பேமஸானார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதையடுத்து சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். அண்மையில் வெளிவந்த மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் வனிதா. படத்தை அவரின் மகள் ஜோதிகா தான் தயாரித்திருந்தார். அதில் தன்னுடைய முன்னாள் காதலரான ராபட்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வனிதா.
சின்னத்திரையில் களமிறங்கிய வனிதா
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்து படு தோல்வியை சந்தித்தது. இதனால் அப்படத்தை ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் யூடியூபில் வெளியிட்டார் வனிதா. படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதனை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். படத்தின் வாயிலாக வனிதா கடுமையாக நஷ்டத்தை சந்தித்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது சின்னத்திரைக்கு தாவி இருக்கிறார். பிரபல சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் வனிதா.
ஜீ தமிழ் சீரியலில் நடிக்கும் வனிதா
அதன்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் 2 சீரியலில் நியூ என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா. அந்த சீரியலில் சரோஜா என்கிற கதாபாத்திரத்தில் வனிதா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காதல் கதைய அம்சம் கொண்ட இந்தத் தொடரின் முதல் பாகத்தில் ஜனனி அசோக்குமார் நாயகியாக நடித்து வந்தார். அவர் விலகியதை எடுத்து முதல் பாகம் முடிக்கப்பட்டு தற்போது பல்லவி நாயகியாக வைத்து இதயம் 2 சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினம் தோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
வனிதா நடித்த சீரியல்கள்
நடிகை வனிதா விஜயகுமார் சின்னத்திரை சீரியலில் நடிப்பது முதன்முறையல்ல, அவர் இதற்கு முன்ன சின்ன பாப்பா பெரிய பாப்பா, சந்திரலேகா போன்று சன் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் திருமதி ஹிட்லர், மாரி போன்ற சீரியல்களில் அடித்திருந்தார் வனிதா விஜயகுமார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இதயம் 2 சீரியல் மூலம் மீண்டும் கம்பன் கொடுத்திருக்கிறார் வனிதா. அவரின் வரவால் இந்த சீரியலின் டிஆர்பியும் எகிற அதிக வாய்ப்புள்ளது.