- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பிளேட்டை மாற்றி போட்ட தங்கமயில் – ஒன்னுமே பேச முடியாமல் வசமாக சிக்கிக் கொண்ட சரவணன்!
பிளேட்டை மாற்றி போட்ட தங்கமயில் – ஒன்னுமே பேச முடியாமல் வசமாக சிக்கிக் கொண்ட சரவணன்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தன்னை பற்றி தனது கணவர் பேசுவதற்கு முன்னதாகவே தங்கமயில் ஒரு டிராமா நடத்தி கணவர் சரவணனைப் போட்டுவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு வழியாக காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடியாக முடிந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே பாண்டியனின் கடையில் வேலை பார்க்கும் அவரது சம்பந்தி மாணிக்கம் ரூ.500 ஆட்டைய போட்ட நிலையில் இப்போது மீண்டும் 2ஆவது முறையாக கொஞ்சம் முன்னேறி ரூ.1100ஐ ஆட்டைய போட்டுள்ளார். அவர் யாருமே பார்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் சரவணன் பார்த்துவிட்டார். ஆனால், அப்போதே தனது மாமனாரிடம் அவர் கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை.
அப்பா மீது பழி போடாதீங்க
மாறாக, தங்கமயிலிடம் கேட்டார். தனது அப்பா அப்படியெல்லாம் கிடையாது, திருட்டு பழி போடாதீங்க, அப்படி இப்படி என்று டிராமா போட்டார். அப்போது பாண்டியன் வரவே அதோடு அந்த டாபிக் முடிந்தது. ஆனால், வீட்டில் வரவு செலவு கணக்கு பார்க்கும் போது ரூ.1100 குறைவது தெரிந்துவிட்டது. எப்போதும் அரசி தான் கணக்கு வழக்கு பார்ப்பார். ஆனால், அவருடன் இருந்த தங்கமயில் நான் கணக்கு பார்க்கிறேன் என்று கேட்டார். ஆனால், அரசி கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாண்டியனின் சந்தேகம் முழுவதும் பழனிவேல் பக்கம் திரும்பியது.
பழனிவேல் மீது திருட்டு பழி
அவன் தான் எடுத்திருப்பான் என்று கூறி பழனிவேலுவை அழ வைத்துவிட்டார். அப்போதும் கூட தங்கமயில் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோபில் எல்லாமே தெரிந்தும் தங்கமயில் அமைதியாக இருந்த நிலையில், சரவணன் தனது ஆத்திரத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரிடம் கேட்டு சண்டையிட்டார். அப்போதும் கூட தங்கமயில் தன்னுடைய அப்பா பணத்தை எடுக்கவில்லை, வீணா பழி போடாதீங்க அப்படி இப்படி என்று டிராமா போட்டார். பிறகு சரவணன் சண்டையிட்டு அங்கிருந்து சென்ற நிலையில் உடனே தங்கமயில் தனது அப்பாவிற்கு போன் போடவே அவரது அம்மா பாக்கியம் தான் போனை எடுத்தார்.
அப்பாவிற்கு போன் போட்ட தங்கமயில்
ஏன், அம்மா அப்பா இப்படி பண்ணுகிறார். கடையிலிருந்து பணம் எடுத்திருக்கிறார். இதற்கு தான் நான் கடைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன் என்று ஆரம்பிக்க, அப்படி பணம் எடுத்தாரா? என்னிடம் சொல்லவே இல்ல பாரு, இரு நான் கேட்கிறேன். அடுத்தமுறை திருட்டை கூட தெரியாமல் பண்ண சொல்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரவணன் அங்கு வர தங்கமயில் வசமாக மாட்டிக் கொண்டார். உடனே போனை கட் செய்ய, சரவணன் உடம்பு முழுவதும் பொய். ஓ குடும்பமாக சேர்ந்து திருடுறீங்களா என்று கேட்டார். சரி, இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. காலையில் முதல் வேலையாக என்னுடைய அப்பா, அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லிவிடுகிறேன் என்றார்.
சரவணனை போட்டுக் கொடுத்த தங்கமயில்
ஆனால், சரவணன் சொல்வதற்குள்ளாக தங்கமயில் அப்படியே உள்டாவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். இதனால், பாண்டியன் மற்றும் கோமதி இருவருக்கும் ஆத்திரமும், கோபமும் வந்தது. ஏன், சரவணன் இப்படி இருக்கான் என்று இருவரும் பேசிக் கொண்ட நிலையில் உடனே சரவணனை அழைத்து வார்னிங் கொடுத்தனர். குழந்தை விஷயத்தில் யாரும் பொய் சொல்ல மாட்டாங்க, நீ ஏண்டா சந்தேகப்படுற என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், தங்கமயில் சொன்னதில் துளி கூட உண்மையில்லை என்று சரவணனுக்கு தெரிந்தும் தனது அப்பா அம்மாவிடம் உண்மையை சொல்ல முடியாமல் சரவணன் திணறிய நிலையை பொய்யை கூட உண்மை மாதிரி சொல்லி மாமனார் மற்றும் மாமியாரை ஏமாற்றியுள்ளார்.