- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்; கடும் சரிவை சந்தித்த விஜய் டிவி
TRP ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்; கடும் சரிவை சந்தித்த விஜய் டிவி
தமிழ் சின்னத்திரை TRP ரேட்டிங் இந்த வார பட்டியல் வெளியாகி உள்ளது. சில முக்கிய சீரியல்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
தமிழ் சின்னத்திரை உலகில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் TRP ரேட்டிங் பட்டியல், எந்த சீரியல் ரசிகர்களை அதிகம் கவருகிறது என்பதை அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் மூலம் ஈஸியாக கணிக்க முடியும். இந்த நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் வெளியான TRP பட்டியலில் சில முக்கியமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்த வாரம் டாப் 10-ல் இடம்பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
முதலிடத்தில் மூன்று முடிச்சு
இந்த வாரமும் மூன்று முடிச்சு சீரியல் தான் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. முதலிடம் மாறாமல் இருந்தாலும், சிறிய அளவில் TRP குறைந்துள்ளது. கடந்த வாரம் 9.48 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.40 டிஆர்பியை பெற்றுள்ளது. சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் TRP ரேஸில் வலுவான போட்டியை கொடுக்கிறது. கடந்த வாரம் 8.18 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8.48 டிஆர்பி ரேட்டிங் பெற்று ஏற்றம் கண்டுள்ளது. இது நம்பர் 1 இடத்தை நோக்கி நகரும் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
டாப் 5ல் சன் டிவி சீரியல்கள்
டாப் 5-ல் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் ஒன்றாக இருந்த கயல் மற்றும் அன்னம் சீரியல்கள், இந்த வாரம் தனித்தனியாக பட்டியலில் வந்துள்ளன. Kayal சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7.71 புள்ளிகளை பெற்று 3-ம் இடத்தில் நீடிக்க, அன்னம் சீரியல் மளமளவென சரிவை சந்தித்து, 7.06 டிஆர்பி ரேட்டிங் உடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. மேலும், ஐந்தாம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் கூடுதலாக ரேட்டிங் பெற்றிருந்தாலும் அதே இடத்தில் தான் நீடிக்கிறது. அதற்கு 7.34 புள்ளிகள் கிடைத்துள்ளன.
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பின்னடைவு
சிறகடிக்க ஆசை சீரியல் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை, இந்த வாரம் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதற்கு கடந்த வாரம்: 7.34 புள்ளிகளும், இந்த வாரம்: 6.70 புள்ளிகளும் கிடைத்துள்ளன. இது பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்டியலில் பிற்பாதியிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த வாரம் போல் இந்த வாரமும் 6-வது இடத்திலேயே நீடிக்கிறது அய்யனார் துணை சீரியல். அந்த சீரியலுக்கு கடந்த வாரத்தில் 7.14 புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் அதைவிட குறைவாக 6.73 டிஆர்பி மட்டுமே கிடைத்துள்ளது.
டாப் 10ல் நியூ எண்ட்ரி
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் சற்று ஏற்றம் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் 6.26 புள்ளிகளும், இந்த வாரத்தில் 6.38 புள்ளிகளும் கிடைத்துள்ளன. இந்த இடங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. கடந்த வாரம்: 6.36 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 5.89 புள்ளிகளை பெற்றிருந்தது. TRP கணிசமாக குறைந்ததால், இது கவனிக்க வேண்டிய மாற்றமாக உள்ளது. புதிய என்ட்ரியாக சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் Top 10-ல் நுழைந்துள்ளது. அதற்கு 4.98 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அடுத்த வாரம் யார் முன்னிலைப் பிடிப்பார்கள் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

