- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அம்பலமான அருணின் உருட்டுகள்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
அம்பலமான அருணின் உருட்டுகள்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா கடையை மீட்டுக் கொடுக்க உதவியது முத்து தான் என்கிற உண்மை சீதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அருண் வசமாக சிக்கி உள்ளார்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் ஸ்கூட்டர் திருடுபோன நிலையில், அவருக்கு புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துள்ளார் முத்து. அந்த புது ஸ்கூட்டர் வாங்கிய கையோடு, கோவிலுக்கு செல்லும் முத்து அங்கு வண்டிக்கு பூஜை போட்டு, மீனாவிடம் சாவியை கொடுத்து ஒரு ரைடு செல்லுமாறு கூற, அவர் முத்துவையும் அழைக்கிறார். இதையடுத்து முத்துவும், மீனாவும் ஜோடியாக புது ஸ்கூட்டரில் செல்கிறார்கள். வீட்டுக்கு இருவரும் செல்லும் வழியில் அவர்களை டிராபிக் போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அபராதம் செலுத்த சொல்லும் போலீஸ்
முத்துவும், மீனாவும் முறையாக ஹெல்மெட் அணிந்து தான் வண்டி ஓட்டி வந்தார்கள். இருப்பினும் அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ், நம்பர் பிளேட்டை மறைக்கும் வகையில் வண்டியில் மாலை போட்டதற்காக அபராதம் கட்ட வேண்டும் என சொல்கின்றனர். இருவரும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு அருண் வருகிறார். அவர் என்ன பிரச்சனை என்று விசாரிக்க, அந்த போலீஸ் நடந்ததை கூறுகிறார். உடனே அருண் இது அவ்வளவு பெரிய தவறு இல்லை அவங்களை விட்டுவிடுங்கள் என சொல்கிறார். ஆனால் முத்து, இதற்கு எவ்வளவு அபராதம்னு சொல்லுங்க நாங்க கட்டுகிறோம் என சொல்ல, அதெல்லாம் வேண்டாம் கிளம்புங்க என சொல்கிறார் அருண்.
புது ரெஸ்டாரண்ட் திறந்த ஸ்ருதி
இதையடுத்து நேராக ஸ்ருதியின் புது ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு முத்துவும் மீனாவும் செல்கிறார்கள். அங்கு மீனாவின் அம்மா, சீதா ஆகியோரும் வந்திருக்கிறார்கள். மீனாவின் குடும்பம் இந்த ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு வந்திருப்பது விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பின்னர் அங்கு வரும் ஸ்ருதியின் பெற்றோர், மீனாவின் தொழிலை மட்டம் தட்டும் விதமாக பேச, அதற்கு மீனாவும் தக்க பதிலடி கொடுக்கிறார். இதனால் அங்கிருந்து ஒதுங்கி செல்கிறார் ஸ்ருதியின் அப்பா. பின்னர் ரிப்பன் கட் பண்ணி ரெஸ்டாரண்டை ஓபன் பண்ணுகிறார்கள். அனைவரும் ஸ்ருதிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.
வெளிவந்த உண்மை
இந்த ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு விஜயாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கித் தருவதாக இருந்த கோகிலாவும் வந்திருந்தார். அவர் மீனாவை பார்த்து, பேசுகையில், முத்து ஆபிஸரிடம் பேசி, உங்க அம்மா கடையை மீட்டுக் கொடுத்த விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட மீனா, அப்போ அருண் இதெல்லாம் பண்ணலையா என ஷாக் ஆக, அருகில் இருந்த சீதாவுக்கும் இந்த உண்மை தெரிந்துவிடுகிறது. அப்போ இத்தனை நாள் அருண் சொன்னதெல்லாம் உருட்டா என அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து முத்துவிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார் சீதா. இதன் பின் அருணின் நிலைமை என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.