- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP கிங் ஆக மாறிய சன் டிவி... புஸ்ஸுனு போன விஜய் டிவி..! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
TRP கிங் ஆக மாறிய சன் டிவி... புஸ்ஸுனு போன விஜய் டிவி..! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
சின்னத்திரை சீரியல்களின் வெற்றி டிஆர்பியை வைத்து தான் கணிக்கப்படும் நிலையில், இந்த வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி இருக்கிறது.

Top 10 Tamil Serial TRP
சீரியல்கள் என்றாலே ஜவ்வாக இழுக்கப்படும் என்பதெல்லாம் அந்தக் காலம். தற்போது சினிமாவுக்கு நிகரான ஸ்கிரீன்பிளே உடன் செம விறுவிறுப்பாக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால் அதனை விரும்பி பார்ப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 38-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10. கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் தான் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 10வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 5.42 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் அதைவிட குறைவாக... அதாவது 5.38 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் மற்றும் நிரோஷா நடித்துள்ள இந்த சீரியல் கடந்த வாரம் 6.27 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.32 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
8. சின்ன மருமகள்
நவீன், ஸ்வேதா நடிப்பில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல், கடந்த வாரம் 6.25 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 6.34 புள்ளிகளுடன் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
7. இராமாயணம்
சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் என்கிற புராண கதையம்சம் கொண்ட டப்பிங் சீரியல் கடந்த வாரம் 6.85 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 7.32 புள்ளிகளை பெற்றிருந்தாலும் டிஆர்பி ரேஸில் அதே இடத்தில் தான் நீடிக்கிறது.
6. அய்யனார் துணை
விஜய் டிவியில் மதுமிதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் டிரெண்டிங் சீரியலான அய்யனார் துணை, கடந்த வாரம் 7.36 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரமும் 7.49 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலேயே நீடிக்கிறது.
5. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரமும் எந்த வித முன்னேற்றமும் இன்றி அதே இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் 7.82 டிஆர்பி ரேட்டிங் உடன் 5-ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் 7.83 புள்ளிகள் உடன் அதே இடத்தில் உள்ளது.
4. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தொடர்கிறது, 9.02 புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 9.03 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று 4-ம் இடத்திலேயே நீடித்து வருகிறது.
3. கயல் - அன்னம் - மருமகள் மெகா சங்கமம்
சன் டிவியில் முதன்முறையாக கயல், அன்னம் மற்றும் மருமகள் ஆகிய மூன்று சீரியல்களையும் இணைத்து மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு கடந்த வாரமே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. கடந்த வாரம் 9.66 புள்ளிகளை பெற்றிருந்த இந்த மெகா சங்கமம், இந்த வாரம் 9.91 புள்ளிகள் உடன் 3-ம் இடத்தில் உள்ளது.
2. சிங்கப்பெண்ணே
சன் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்த சிங்கப்பெண்ணே, கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது. சென்ற வாரம் 9.99 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருந்த அந்த சீரியல், இந்த வாரமும் 10.02 புள்ளிகளை பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது.
1. மூன்று முடிச்சு
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் முதல் இடத்தை மூன்று முடிச்சு சீரியல் ஆக்கிரமித்து உள்ளது. ஸ்வாதி கொண்டே ஹீரோயினாக நடித்து வரும் இந்த சீரியல், கடந்த வாரம் 10.14 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் அதற்கு 10.29 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.