MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி வீட்டை ஆட்டைய போட்ட சிவனாண்டி; உடந்தையாக இருந்த சந்திரகலா: கார்த்திகை தீபம் 2!

சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி வீட்டை ஆட்டைய போட்ட சிவனாண்டி; உடந்தையாக இருந்த சந்திரகலா: கார்த்திகை தீபம் 2!

Sivanandi Cheating Chamudeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமூண்டீஸ்வரிக்கு சொந்தமான வீட்டை அவரது தங்கை சந்திரகலா கணவர் சிவனாண்டி எழுதி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

2 Min read
Rsiva kumar
Published : Sep 11 2025, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Karthigai Deepam 2 Serial Youtube Screenshot

கார்த்திகை தீபம் 2 சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு புறம் உண்மையை வெளிக் கொண்டு வர கார்த்திக் கான்ஸ்டபிள் மொபைல் போனை தேடிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ரோகிணி கர்ப்பமாக இருப்பது சாமுண்டீஸ்வரியைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதே போன்று சிறையிலிருந்த வெளியில் வந்த காளியம்மாள் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கார்த்திக் வீட்டில் இல்லாத நிலையில் சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி அவரது வீட்டை எழுதி வாங்க பிளான் போட்டார்.

26
Image Credit : Karthigai Deepam 2 Serial Youtube Screenshot

இதற்காக டிரஸ்ட் என்ற பெயரில் பெண்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறி வீட்டிற்கு வந்த இருவரிடம் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் இடத்தை எழுதி கொடுக்க முன் வந்துள்ளார். அப்போது காளியம்மாள் மேஜிக்பேனாவை வைத்து சாமுண்டீஸ்வரியை ஏமாற்ற திட்டம் போட்டார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

36
Image Credit : Zee Tamil Screen Shot

கார்த்திக் ரேவதி ஆகியோர் துர்கா நவீனை சந்தித்து பேசுகின்றனர். அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் டாக்குமெண்ட்டை கொடுத்து சாமுண்டீஸ்வரியிடம் கையெழுத்து வாங்குகின்றனர். கையெழுத்து வாங்கி இவர்கள் வெளியே கிளம்ப கார்த்திக் வீட்டுக்குள் நுழைய என்ன விஷயம் என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட்ட விஷயத்தை சொல்கிறார். கார்த்திக் எல்லாத்தையும் முழுசா படிச்சுதானே கையெழுத்து போட்டீங்க என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரியும் ஆமாம் என்று சொல்கிறார்.

46
Image Credit : Zee Tamil Screen Shot

அடுத்த நாள் காலையில் சிவனாண்டி வீட்டுக்கு வந்து சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதிக் கொடுத்துட்டார். இனி இது என்னுடைய வீடு. வீட்டில் உள்ள எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்ல, ஒட்டு மொத்த குடும்பத்னர் மட்டுமின்றி ஊர் மக்களும் அதிர்ச்சி அடைகின்றனர். சாமுண்டீஸ்வரி கையெழுத்து நான்தான் போட்டேன். ஆனா வீட்டை எழுதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்.

56
Image Credit : Zee Tamil Screen Shot

இதைத் தொடர்ந்து சிவனாண்டி மீது புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறேன் என்று சொல்ல, கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். பிறகு கோர்ட்டுக்கு செல்ல வேண்டி வரும். அதன் பின் 24 மணி நேரத்தில் வீட்டை எழுதி கொடுக்க வேண்டி வரும். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நானே உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று தனது ஆக்‌ஷன் வேட்டையில் இறங்குகிறார்.

இதைத் தொடர்ந்து ரூமுக்கு சென்ற கார்த்திக்கிற்கு ரேவதி ஷாக் மேல ஷாக் கொடுக்கிறார். அவர் ஃபர்ஸ்ட் நைட் ஷெட்டப்புக்கு ஏற்பாடு செய்து வைத்திருக்க, அதைப் பார்த்து கார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே கார்த்திக் தனது அத்தை பையன் என்பது தெரிந்தும், அவர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிந்தும் அவரை துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதும் கூட ரேவதிக்கு தெரிந்துவிட்டது.

66
Image Credit : Zee Tamil You Tube Screen shot

இந்த சூழலில் தான் ரேவதி தனக்கு முதலிரவு நடக்க வேண்டி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
சினிமா
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
கிரிஷுக்கு வில்லியாக மாறிய விஜயா... அம்மாவிற்கு பயந்து முத்து எடுக்கும் அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved