- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணி, ரேவதியின் புடவையை துவைக்கும் சிவனாண்டி, முத்துவேல் – சிரிப்பா சிரிக்கும் மயில்; கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
ரோகிணி, ரேவதியின் புடவையை துவைக்கும் சிவனாண்டி, முத்துவேல் – சிரிப்பா சிரிக்கும் மயில்; கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Sivanandi and Muthuvel Work in Chamundeshwari House : பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சபதத்தில் ஜெயித்து சிவனாண்டியை தனது வீட்டில் எடுபுடி வேலை பார்க்க வைத்துள்ளார் சாமுண்டீஸ்வரி.

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரி
கார்த்திகை தீபம் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஊர் தலைவர் அதாவது பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் சாமுண்டீஸ்வரி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், சிவனாண்டி டெபாசிட் இழந்து தான் விட்ட சபதத்தில் தோல்வியை தழுவினார். சபதத்தில் ஜெயித்த சாமுண்டீஸ்வரி, சிவனாண்டியை தனது வீட்டில் வேலை பார்க்க வைத்துள்ளார். அவருடன் அவரது சித்தப்பா முத்துவேலுவும் வேலை பார்க்கின்றனர். முதலில் ரோகிணியின் புடவையை துவைக்கின்றனர். அதன் பிறகு ரேவதியுன் புடவைகளை கொண்டு வந்து தருகிறார். இது ஒரு புறம் இருக்க சாமுண்டீஸ்வரி மக்களுக்கு உதவி செய்யும் தனது வேலைகளை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை பார்க்கும் சிவனாண்டி, முத்துவேல்
அம்மாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பாட்டி பரமேஸ்வரியை வீட்டிற்கு அழைத்து அவரது மகள்கள் விருந்து வைத்துள்ளனர். கார்த்திக் மற்றும் ரேவதியின் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது ஒரு புறம் இருக்க, ஜெயிலில் கம்பியென்னும் காளியம்மாள் கார்த்திக்கை பழி தீர்ப்பேன் என்றும் சாமுண்டீஸ்வரியின் குடும்பத்தை அழிப்பேன் என்றும் சபதம் எடுத்துள்ளார். இதெல்லாம் கடந்த வாரம் நடந்த காட்சிகள். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இந்த் வாரம் என்ன காட்சிகள் நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம். ஏற்கனவே இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி புதிதாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் மகளே என் மருமகளே என்ற சீரியலிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல் இந்த வாரம் எபிசோடுகள்
ஆதலால் கார்த்திகை தீபம் 2 சீரியலில் பாதி நேரம் அவர் தொடர்பான காட்சிகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை பார்க்கும் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இப்போது புடவை துவைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இனி நாளை பாத்திரம் துழக்குவதும், வீடு பெருக்குவதும் போன்ற காட்சிகள் இடம் பெறலாம் என்று தெரிகிறது. மேலும், கார்த்திக்கை எப்படி லவ் பண்ண வைப்பது என்பது குறித்து ரேவதி திட்டமிடும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபம் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.