MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சிங்கப்பெண்ணே முதல் ஆடுகளம் வரை... 5 சீரியல்களின் நேரம் மாற்றம் - காரணம் என்ன?

சிங்கப்பெண்ணே முதல் ஆடுகளம் வரை... 5 சீரியல்களின் நேரம் மாற்றம் - காரணம் என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, ஆடுகளம், எதிர்நீச்சல் தொடர்கிறது, இரு மலர்கள் ஆகிய ஐந்து சீரியல்களின் நேரம் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 04 2026, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sun TV Serial Timing Changed
Image Credit : instagram

Sun TV Serial Timing Changed

சன் டிவி சீரியல்களுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி, காலையில் இருந்து இரவு 11 மணிவரை சீரியல்களை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறது. மக்கள் மத்தியிலும் சீரியல்களும் வரவேற்பு கிடைப்பதால், ஒரு சில சீரியல்களை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார். அதுமட்டுமின்றி இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து மகா சங்கமமாகவும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால் சன் டிவி ஐந்து சீரியல்களின் நேரத்தை மாற்றி உள்ளது.

26
ஆடுகளம்
Image Credit : X

ஆடுகளம்

டெல்னா டேவிஸ் நடிப்பில் சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ஆடுகளம். அந்த சீரியல் தற்போது மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 9-ந் தேதி முதல் ஆடுகளம் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Related Articles

Related image1
அடுத்த மெகா சங்கமம் இந்த 2 சீரியல்கள் தான்.. சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் குஷி
Related image2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
36
சிங்கப்பெண்ணே
Image Credit : Instagram

சிங்கப்பெண்ணே

சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான சிங்கப்பெண்ணே, திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அமல்ஜித், மனிஷா மகேஷ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

46
மூன்று முடிச்சு
Image Credit : youtube/suntv

மூன்று முடிச்சு

டிஆர்பி ரேஸில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீரியல் மூன்று முடிச்சு. இதில் நியாஸ் கான், ஸ்வாதி கொண்டே ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தற்போது இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வருகிற பிப்ரவை 9-ந் தேதி முதல் மூன்று முடிச்சு சீரியல் ஒரு மணிநேர ஸ்பெஷலாக இரவு 8.30 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.

56
இரு மலர்கள்
Image Credit : X

இரு மலர்கள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் இரு மலர்கள். இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து ஒரு மணிநேர ஸ்பெஷலாக மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாகி வந்தது. தற்போது 3 மணிக்கு ஆடுகளம் சீரியல் வந்துள்ளதால், இனி இருமலர்கள் சீரியல் 2.30 முதல் 3 மணி வரை மட்டுமே ஒளிபரப்பாகுமாம்.

66
எதிர்நீச்சல் தொடர்கிறது.
Image Credit : X

எதிர்நீச்சல் தொடர்கிறது.

சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தொடர்கிறது, தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், வருகிற பிப்ரவரி 9-ந் தேதி முதல் அந்த சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நேர மாற்றத்தால் டிஆர்பியும் அடிவாங்க வாய்ப்பு உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
எதிர் நீச்சல் தொடர்கிறது.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராகவ் - நிலா காதலுக்கு வேட்டு வைத்த சோழன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related Stories
Recommended image1
அடுத்த மெகா சங்கமம் இந்த 2 சீரியல்கள் தான்.. சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் குஷி
Recommended image2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved