- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஓட்டல் திறந்த முதல் நாளே முட்டி மோதிக் கொண்ட ஸ்ருதி - ரவி... விஜயாவின் அடுத்த சதி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஓட்டல் திறந்த முதல் நாளே முட்டி மோதிக் கொண்ட ஸ்ருதி - ரவி... விஜயாவின் அடுத்த சதி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிதாக ஓட்டல் திறந்துள்ள ஸ்ருதி, முதல் நாளே ரவி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவுக்கு தன்னுடைய அம்மா கடையை மீட்டுக் கொடுத்தது முத்து தான் என்கிற உண்மை தெரியவர, அவர் அருண் உடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிடுகிறார். இதையடுத்து சீதா தன்னுடைய அம்மா வீட்டுக்கு வர, அங்கு இருக்கும் மீனாவுக்கு அவர் அருணுடன் சண்டை போட்ட விஷயம் தெரியவருகிறது. என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும், இதுபோன்று வரக் கூடாது என சீதாவுக்கு புத்திமதி சொல்கிறார் மீனா. அருண் வந்து தன்னை அழைத்து செல்லும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என விடாப்பிடியாக இருக்கிறார் சீதா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
முத்துவிடம் சீதா மேட்டரை போட்டுடைத்த மீனா
வீட்டுக்கு வரும் மீனா, முத்துவிடம், சீதா கோபித்துக் கொண்டு வந்த விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்ட முத்து, இது ஒரு விஷயம்னு இதுக்கெல்லாம் கோபிச்சுட்டு வருவாங்க என மீனாவிடம் கேட்க, அவரோ, அப்படிப் பார்த்தால், நான் வாரத்துக்கு ஒருமுறை என்னுடைய அம்மாவீட்டுக்கு கோபிச்சிட்டு போகனும் என சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆகும் முத்து, நான் என்ன உங்கிட்ட சண்டைபோட்டேன் என கேட்க, அதற்கு சீதா, நீங்க சண்டைபோட மாட்டீங்க. ஆனால் குடிச்சிட்டு வருவதை சுட்டிக்காட்டுகிறார். உங்களுக்கு கோபம் வந்தால் நீங்க உங்க அம்மாவீட்டுக்கு போயிடுவீங்க, நாங்க எங்க போவோம் என கேட்கிறார் முத்து.
ஸ்ருதி - ரவி இடையே சண்டை
மறுபுறம் ஸ்ருதியும் ரவியும் சண்டைபோடுகிறார்கள். நான் ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணிருக்கேன். கெஸ்டா வந்தவங்க கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு தான் போனாங்க. ஆனா நீ ரொம்ப ஒர்ஸ்டா நடந்துகிட்ட. அந்த நீத்து போனா நீயும் பின்னாடியே போயிடுவியா என கேட்க, நீத்துவிடம் உன்னுடைய அம்மாவும் அப்பாவும் என்ன பேசினார்கள் தெரியுமா என கேட்க, அதையெல்லாம் காதுகொடுத்து கேட்காத ஸ்ருதி, என்னவேனா பேசட்டும், நீ ஏன் பாதியிலேயே போன, வந்தவங்க எல்லாம் உன் கணவர் எங்க என என்னிடம் கேட்டார்கள். ரொம்ப அசிங்கமா போச்சு என ஃபீல் பண்ணி பேசுகிறார் ஸ்ருதி.
விஜயாவை சந்திக்கும் ஸ்ருதியின் பெற்றோர்
பின்னர் ஸ்ருதியின் பெற்றோர் விஜயாவை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது ஸ்ருதி நடத்தும் ஓட்டலுக்கு ரவி வராதது பற்றி தங்கள் வருத்தத்தை தெரிவிக்கிறார்கள். அதற்கு விஜயா, அவன் சொந்தமா ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என இருக்கிறான் என சொல்ல, அதெல்லாம் எதுக்கு, நாங்க சம்பாதித்து வச்சிருக்கும் மொத்த சொத்தும் எங்களது ஒரே பொண்ணு ஸ்ருதிக்கு தான் என சொல்கிறார். சொத்து விஷயத்தை கேட்டதும் ஆஃப் ஆன விஜயா, அதை எப்படி அபேஸ் செய்வது என பிளான் போடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.