- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணி செய்த முட்டாள்தனமான வேலை.. விஜயாவுக்கு பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ரோகிணி செய்த முட்டாள்தனமான வேலை.. விஜயாவுக்கு பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி ஷோரூமில் இருந்து எடுத்து வந்த பையால், வீட்டில் சலசலப்பு நிலவி இருக்கிறது. அப்படி அந்த பையில் என்ன இருந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தான் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்தார் என்பது மட்டுமின்றி அவர் ஆட்டோ டிரைவருக்கு செய்த உதவியும் சீதாவுக்கு தெரியவர, அவர் உடனே தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று அங்கு இருந்த மீனாவிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து முத்துவுக்கும் போன் போட்டு பேசிய சீதா, அவரிடம் அழுதபடி மன்னிப்பு கேட்டார். அதற்கு முத்து, நீயும் மீனாவும் சந்தோஷமா இருங்க அதுபோதும் எனக்கு என சொல்கிறார். சீதாவும் மீனாவும் மீண்டும் இணைந்ததால் அவரது அம்மாவும் மகிழ்ச்சி அடைக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மனோஜின் ஷோரூமில் நடக்கும் சம்பவம்
மனோஜின் ஷோரூமிற்கு வரும் பாம்பாட்டி ஒருவர், தன்னுடைய மகன் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும், அவனுக்கு ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்க வந்திருப்பதாக சொல்கிறார். அப்போது அங்கு இருக்கும் பொருட்களையெல்லாம் பார்க்க செல்லும் அந்த பாம்பாட்டி, தன் தோளில் வைத்திருந்த கூடையை ஒரு ஓரமாக வைத்து செல்ல, அதில் இருந்த பாம்பு வெளியே வந்து கடையில் இருந்த ஒரு பையிற்குள் புகுந்துவிடுகிறது. பையில் என்ன இருக்கிறது என்றுகூட பார்க்காமல் அதை எடுத்துக் கொண்டு மனோஜ் உடன் வீட்டிற்கு கிளம்பி செல்கிறார் ரோகிணி. வீட்டிற்கு வந்ததும் விஜயாவிடம் பேசிவிட்டு இருவரும் ரூமிற்கு செல்கிறார்கள்.
வீட்டிற்குள் புகுந்த பாம்பு
அப்போது ரோகிணி போன் வருகிறது. அதை எடுத்து பேச சென்ற ரோகிணி, கையில் இருந்த பையை பெட்டில் போட்டு விடுகிறார். அப்போது அந்த பையில் இருந்த பாம்பு வெளியே வருகிறது. அது ஒவ்வொரு ரூமாக செல்கிறது. ஹாலில் வைத்திருந்த பாலை குடித்ததை கூட யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து இறுதியாக விஜயாவின் ரூமிற்குள் சென்றுவிடுகிறது. இரவில் தூங்குவதற்காக ரூமிற்குள் செல்லும் விஜயா, அங்கு பாம்பை பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு வெளியே வருகிறார். பின்னர் ரூமுக்குள் செல்லும் முத்து, அந்த பாம்பை பையில் பிடித்துவிடுகிறார்.
திட்டு வாங்கும் ரோகிணி
இதையடுத்து மனோஜுக்கு ஷோரூமில் இருந்து போன் வருகிறது. காலையில் கடைக்கு வந்திருந்த பாம்பாட்டி, பாம்பைக் காணவில்லை என வந்திருப்பதாக கூறுகிறார்கள். அதன் பின்னர் தான் மனோஜின் ஷோரூமில் இருந்து அந்த பாம்பு வீட்டிற்கு வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியவருகிறது. அந்த பாம்பு இருந்த பையை தூக்கி வந்த ரோகிணியை விஜயா திட்டுகிறார். பையில் என்ன இருக்குனு பார்க்கமலா எடுத்துட்டு வருவ என கடிந்துகொள்கிறார். எது எப்படியோ, இன்றைய எபிசோடை பாம்பை வைத்தே ஓட்டிவிட்டார்கள். இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.