- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனாவின் குடும்பத்தில் குட்டையை குழப்ப வரும் புது ஆள்... காதல் வலையில் சிக்கும் சத்யா? சிறகடிக்க ஆசை அப்டேட்
மீனாவின் குடும்பத்தில் குட்டையை குழப்ப வரும் புது ஆள்... காதல் வலையில் சிக்கும் சத்யா? சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் வேலையை விட்டு நிற்க சென்ற சத்யாவுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரின் கம்பெனிக்கு வந்த புது பெண்ணால் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வெயிட்டிங்கில் உள்ளது.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி வேலை செய்யும் நீத்துவின் ஹோட்டலுக்கு செல்லும் ஸ்ருதி, தனது ரெஸ்டாரண்டிற்கு ஆள் பற்றாக்குறையாக இருப்பதால், உங்களிடம் இருந்து உணவுகளை வாங்கி டெலிவெரி செய்ய இருப்பதாக கூறுகிறார். அதற்கு ரவி, இதெல்லாம் சரிவருமா என பேசிக் கொண்டிருக்க நீதுவும் இது நல்ல ஐடியா தான் என சொல்கிறார். பின்னர் நீத்துவிடம், உங்களால் எனக்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என சொல்லும் ஸ்ருதி, நீங்க என் ரெஸ்டாரண்ட் ஆட்களை உங்கள் பக்கம் இழுத்ததால், தற்போது எனக்கு பார்ட் டைம் வேலை பார்க்க கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வந்துள்ளதாக கூறுகிறார்.
ரவிக்கு தெரியவரும் உண்மை
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரவி, நீத்துவிடம் நீங்க அந்த 3 பேரும் அவர்களாக வந்ததாக சொன்னீர்கள். ஆனால் நீங்க தான் அவர்களை வரவைத்தீர்களா என கேட்கிறார் ரவி. அதற்கு நீத்துவும் ஆமாம் என சொல்கிறார். பிசினஸில் இதுபோன்று அரசியல் இருக்கத்தான் செய்யும் என சப்பைக் கட்டு கட்டுகிறார் நீத்து. ஆனால் தனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது என கூறுகிறார் ரவி. இதையடுத்து மறுபுறம் முத்துவின் அறிவுரையின் பேரில், தான் வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனிக்கு சென்று தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய செல்கிறார் சத்யா. அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
சத்யாவிற்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
சத்யா, இந்த வேலையில் இருக்கும் மைனஸை எல்லாம் கூறி, இதனால் தனக்கு இந்த வேலையில் திருப்தி இல்லை என சொல்லிவிட்டு வேலையை ரிசைன் செய்வதாக கூறுகிறார். அப்போது அங்கு முதலாளி சேரில் ஓனரின் மகள் அமர்ந்திருக்க, அதைப்பார்த்து ஷாக் ஆன சத்யா, நீங்க யார் என கேட்க, அதற்கு அந்த பெண், நான் ரேகா, இப்போ தான் ஃபாரினில் படிப்பை முடிச்சிட்டு வந்திருக்கேன். இனி என்னுடைய அப்பாவோட பிசினஸை நான் தான் பார்த்துக்க போறேன். நீங்க சொல்றபடி இந்த கம்பெனியை நம்பிக்கை உள்ளதாக மாற்ற நான் உதவுவதாக சொல்கிறார். இதையடுத்து தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்குகிறார் சத்யா.
செம சம்பவம் வெயிட்டிங்
ஒரு ஊழியரின் ஐடியாவை கேட்டு, உங்க கம்பெனி ரூல்ஸையே மாற்றுவதாக சொல்கிறீர்கள். அதனால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என சொல்கிறார் சத்யா. போகிற போக்கை பார்த்தால் ரேகாவுக்கு முதல் சந்திப்பிலேயே சத்யா மீது கிரஷ் வந்ததுபோல் தெரிகிறது. இதில் காத்திருக்கும் ட்விஸ்ட் என்னவென்றால், அந்தப் பெண் ரேகா, மீனாவின் எதிரியான சிந்தாமணியின் மகளாம். ஒருவேளை ரேகாவும், சத்யாவும் காதல் பண்ணினால், அதன்மூலம் மீனாவின் குடும்பத்திற்குள் நுழைந்து சிந்தாமணி குட்டையை குழப்பவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.