- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சக்தியை காப்பாற்ற முடியாது... கைவிரித்த டாக்டர்; கண்ணீரில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சக்தியை காப்பாற்ற முடியாது... கைவிரித்த டாக்டர்; கண்ணீரில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் போலீஸ் மடக்கிய நிலையில் ஜனனியின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை ஒரு வழியாக மீட்ட ஜனனி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் சென்றபோது ராமசாமி மெய்யப்பன் செட் பண்ணிய போலீஸ் அதிகாரி ஒருவர் ஆம்புலன்ஸை மடக்கி விடுகிறார். ஆம்புலன்சில் ஏதேனும் கடத்தல் பொருள் இருக்கிறதா என சோதனை செய்கிறார். பின்னர் ஜனனி மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவரை ஆம்புலன்ஸ் ஓட்ட விட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
போலீசிடம் இருந்து தப்பித்த ஜனனி
போலீசின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட ஜனனி ஆம்புலன்ஸ் ஒட்டிச்செல்லும்போது எதிரே ஜட்ஜ் ஒருவரின் கார் வருவதை பார்க்கிறார். அந்த கார் வீட்டுக்குள் செல்வதை பார்த்த ஜனனி ஆம்புலன்ஸை அந்த வீட்டின் முன் நிறுத்தி விடுகிறார். பின்னர் இறங்கிச் சென்று அந்த ஜட்ஜியிடம் நடந்தவற்றை கூறுகிறார். அவர் என்ன ஆனது என விசாரிக்கும் போது இதன் பின்னணியில் ஆதி குணசேகரன் இருப்பதாக சொல்கிறார். பின்னர் அவர் செய்த கிரிமினல் வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஜனனி சொன்னதை கேட்டு ஜட்ஜ் ஷாக் ஆகிறார்.
சக்திக்கு என்ன ஆச்சு?
குணசேகரன் மீது ஏகப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது அறிந்த நீதிபதி, நீங்கள் அவரைப் பற்றி கிடைக்காத மறைக்காமல் சொல்லுமாறு ஜனனியிடம் கேட்கிறார். ஜனனி அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டு சக்தியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். மருத்துவமனையில் சக்தியை பரிசோதித்த டாக்டர் அவருக்கு பல சுத்தமாக இல்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் அதை ஏற்க மட்டும் ஜனனி நல்லா செக் பண்ணி பாருங்க என மருத்துவரிடம் கெஞ்சுகிறார்.
ஆதி குணசேகரன் போடும் டிராமா
மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரனிடம் பேசும் விசாலாட்சி, சொல்லி இவ சக்தியை எங்காச்சும் அடைச்சு வச்சிருக்காளா எனக் கேட்கிறார். அப்போது விசாலாட்சி தலையில் கை வைத்து உன் மேல சத்தியமா என் தம்பிக்கு நான் எந்த துரோமும் பண்ண மாட்டேன் என தாயிடம் உறுதி அளிக்கிறார். இதை அடுத்து என்ன ஆனது? சக்தி இறந்து விட்டாரா? இல்லை ஜனனி அவரை காப்பாற்றினாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

