- Home
- Cinema
- தொலைக்காட்சி
- துப்பாக்கி முனையில் ஜனனியை ரவுண்ட் அப் பண்ணிய ராமசாமி... சக்திக்கு என்ன ஆச்சு? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
துப்பாக்கி முனையில் ஜனனியை ரவுண்ட் அப் பண்ணிய ராமசாமி... சக்திக்கு என்ன ஆச்சு? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, சக்தி இருக்கும் இடத்தை நெருங்கிய நிலையில், அவரை ராமசாமி மெய்யப்பன் சுற்றி வளைக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்களை தேடி இராமேஸ்வரத்திற்கு சென்ற சக்திக்கு, அங்கு தேவகியை பற்றிய ரகசியம் தெரியவருகிறது. அவரை ஆதி குணசேகரன் கொலை செய்தது மட்டுமின்றி, தற்போது அவர் ஆண்டு அனுபவிக்கும் சொத்துக்கள் அனைத்தும் தேவகிக்கு சொந்தமானது என்பதையும் தெரிந்துகொண்ட சக்தி, மீண்டும் மதுரைக்கு திரும்பும் வழியில் அவரை ஆள் வைத்து கடத்திவிடுகிறார் ஆதி குணசேகரன். பின்னர் சக்தியை தேடி ஜனனி சென்றிருக்கிறார். இப்படி அனல்பறக்கும் திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சக்தியை சவப்பெட்டியில் அடைத்த ராமசாமி
ஜனனியின் பழைய எதிரியான ராமசாமி மெய்யப்பனை வைத்து சக்தியை கடத்தி வைத்திருக்கும் ஆதி குணசேகரன், தன் சம்பந்தப்பட்ட வீடியோ ஆதாரங்களை கொடுத்த பின்னர் தான் சக்தியை விடுவேன் என மிரட்டி வைத்திருக்கிறார். வீடியோவை தேவி செல்வதாக கூறிவிட்டு, சக்தி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தென்காசிக்கு சென்ற ஜனனி, அங்குள்ள காட்டுப் பகுதி ஒன்றில் சக்தியை ராமசாமி அடைத்து வைத்திருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த இடத்தை ஜனனி நெருங்குவதை அறிந்த ராமசாமி, சக்தியை ஒரு சவப்பெட்டிக்குள் வைத்துவிட்டு, ஜனனியை கொல்ல முடிவெடுக்கிறார்.
துப்பாக்கி முனையில் ஜனனி
காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் ஜனனியை, ரவுண்ட் அப் பண்ணும் ராமசாமியிடம் சக்தியை எதுவும் பண்ணிடாத என கெஞ்சுகிறார் ஜனனி. அப்போது சக்தியை வாய் கட்டப்பட்ட நிலையில், சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும் வீடியோவை காட்டும் ராமசாமியிடம் தயவு செஞ்சு சக்தியை விட்டுவிடு என கேட்கிறார் ஜனனி. அதற்கு அவர், முதலில் உன்னை அனுப்பி வைக்கிறேன். அதன்பின் உன்னுடைய மணாளனை அனுப்பி வைக்கிறேன் என சொல்லி, ஜனனியின் நெத்தியில் துப்பாக்கியை வைக்கிறார். அந்த நேரத்தில் ராமசாமி மெய்யப்பனிடம் இருந்து ஜனனி காப்பாற்றப்படுகிறார்.
சக்தியை கண்டுபிடித்த ஜனனி
இதையடுத்து காட்டுப்பகுதியில் இருக்கும் பேக்டரிக்குள் சென்று சக்தியை தேடி அலைகிறார் ஜனனி, அப்போது அங்குள்ள லேப்டாப்பில் சக்தியின் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் அவர், அருகில் இருந்த சவப்பெட்டியை திறந்து பார்க்கையில் அதில் சக்தி பிணம்போல் கிடக்கிறார். இதைப்பார்த்து நொறுங்கிப் போகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது? ஜனனியை ராமசாமி மெய்யப்பனிடம் இருந்து காப்பாற்றியது யார்? சக்தி மற்றும் ஜனனியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும்.

