- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சீ.. தனுஷ் இவ்ளோ மோசமான ஆளா? சீரியல் நடிகை மான்யா வெளியிட்ட அட்ஜஸ்ட்மென்ட் மேட்டர்
சீ.. தனுஷ் இவ்ளோ மோசமான ஆளா? சீரியல் நடிகை மான்யா வெளியிட்ட அட்ஜஸ்ட்மென்ட் மேட்டர்
தனுஷுடன் அட்ஜெஸ்மெண்ட் செய்தால் சினிமாவில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மேனேஜர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் கூறி இருக்கிறார்.

Manya Anand Adjustment Allegation
கோலிவுட்டின் சர்ச்சை நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். சினிமாவில் யாருக்கு விவகாரத்து ஆனாலும் அதில் தனுஷ் பெயரும் அடிபடுவது தொடர்கதை ஆகி வந்தது. அதெல்லாம் வெறும் வதந்தி என கடந்து போனாலும், தற்போது சீரியல் நடிகை ஒருவர் ஓப்பனாகவே தனுஷ் உடன் அட்ஜெஸ்மெண்டுக்கு அழைப்பு வந்ததாக கூறி பேட்டி ஒன்றில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகையின் பெயர் மான்யா ஆனந்த். அவர் சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை மான்யா பகீர் குற்றச்சாட்டு
நடிகை மான்யா கூறியதாவது : “நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு பண்றீங்களானு கேட்டார். சரி உங்களுடைய டிமாண்ட் என்ன என கேட்டார். அதற்கு நான், ரொம்ப ஓவர் கிளாமரா இருந்தாலும் நடிக்க மாட்டேன், ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தாலும் பண்ண மாட்டேன். எனக்கு டீசண்ட் ஆன கேரக்டர் இருந்தால் நடிப்பேன் என சொன்னேன். தனுஷ் சார் படமாக இருந்தாலும் பண்ண மாட்டீங்களானு கேட்டார். நான் யார் படமாக இருந்தாலும் பண்ணமாட்டேன் என சொல்லிவிட்டேன்.
அட்ஜஸ்மெண்டுக்கு அழைப்பு
அடுத்ததாக கமிட்மெண்ட் இருக்கும்னு சொன்னாங்க. அப்படினா என்னனு கேட்டேன். ஹீரோ கூட கமிட்மெண்ட் இருக்கும்னு சொன்னார். நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லிவிட்டேன். பின்னர் சில நாள் கழித்து இதேபோல் இன்னொரு மேனேஜரிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அவரும் தனுஷ் படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறினார். அதுமட்டுமின்றி ஸ்கிரிப்டையும் எனக்கு அனுப்பினார். நான் அதை படிக்கவே இல்லை. அந்த நபர் உண்மையிலேயே தனுஷின் மேனேஜர் தானா என்பது தெரியவில்லை. ஆனால் இதுபோல் நிறைய நடக்குது.
நிறைய நடிகைகளுக்கு நடக்கிறதாம்
நான் தனுஷுடன் வேலை பார்த்த என்னுடைய சக நடிகை ஒருவரிடமும் இதைப்பற்றி சொன்னேன். அதற்கு அவர், இது தனுஷுக்கே தெரியாமல் நடக்கலாம் என சொன்னார். ஆனால் எனக்கு உண்மை எது என தெரியவில்லை. எனக்கு மட்டுமில்ல நிறைய நடிகைகளுக்கு இதுமாதிரி நடந்திருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என நடிகை மான்யா கூறி இருக்கிறார். இதைப்பார்த்த தனுஷ் ரசிகர்கள், இது சிவகார்த்திகேயன் வேலையாக இருக்கும் என கூறி வருகின்றனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் இதுபற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது பெயரை பயன்படுத்தி சில மோசடியில் ஈடுபடுவதாக அவர் கூறி இருந்தார். ஒருவேளை அதுபோன்ற ஒரு மோசடி வலையில் மான்யா சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.