முதல் மாச சம்பளத்துல கிப்ஃடா வாங்கி குவித்த செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Senthil First Month Salary Surprise Gift : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் தனது முதல் மாச சம்பளத்தில் என்ன செய்திருக்கிறார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; செந்தில் முதல் மாத சம்பளம்
Senthil First Month Salary Surprise Gift :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 571ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியனின் கடையான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த செந்திலுக்கு அவரது அப்பாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் ரூ.10 லட்சம் கொடுத்து அரசு வேலை பெற்றார். அதுவும் சொந்த ஊரிலேயே போஸ்டிங்கும் பெற்றார். இதற்கெல்லாம் காரணம் மீனாவும் அவரது அப்பாவும் தான்.
செந்தில் முதல் மாத சம்பளம்
வேலையில் சேந்து ஒரு மாதம் ஆவதற்குள்ளாக செந்தில் இது வாங்க வேண்டும், அது வாங்க வேண்டும் என்று ஆசையில் இருந்தார். மேலும், மனைவி மீனாவிற்கு என்ன வேண்டும் என்று ஆசையோடு கேட்டு ஒரு மாதிரியாக உற்சாகத்தில் இருந்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் செந்திலுக்கான சம்பளம் கொடுக்கும் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், செந்தில் சம்பளம் பெற்ற கையோடு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிஃப்ட் வாங்கிக் கொண்டு வந்தார். இதில் அம்மாவிற்கு மட்டும் ரூ.1800க்கு புடவை, மீனா, சுகன்யா, தங்கமயில், ராஜீ ஆகியோருக்கு ஒரே மாதிரியான புடவை, தங்கை அரசிக்கு சுடிதார் மற்றும் மேட்சிங் மேட்சிங்காக வளையல் மற்றும் ஜிமிக்கில் கதிர், பழனிவேல், சரவணன் ஆகியோருக்கும் டிரஸ் என்று வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து அசத்தினார்.
செந்தில் சர்ஃப்ரைஸ் கிஃப்ட்
ஆனால், அப்பாவிற்கு மட்டும் வாட்ச் கொடுத்தார். ஏற்கனவே கட்டிய வாட்ச் ஓடவில்லை என்றும் அது ரொம்ப நாட்களாக கையில் கட்டியிருந்த வாட்ச் என்றும் கூறினார். இந்த நிலையில் தான் செந்தில் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ததைக் கண்டு பாண்டியன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். ஏற்கனவே முதல் மாச சம்பளத்தை மீனாவின் லோனுக்கு கட்ட வேண்டும் என்று கூறியிருந்த செந்தில் இன்று தனது சம்பளத்தில் ஆடம்பரமாக செலவு செய்துள்ளார்.