MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அஞ்சலியிடம் டைவர்ஸ் மேட்டரை உலறிய சரவணன்... மீனாவுக்கு ஷாக் கொடுத்த ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

அஞ்சலியிடம் டைவர்ஸ் மேட்டரை உலறிய சரவணன்... மீனாவுக்கு ஷாக் கொடுத்த ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஞ்சலியிடம் போன் போட்டு பேசிய சரவணன், தனக்கு டைவர்ஸ் ஆகப்போவதை சொல்லி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2026, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட்ட மீனா, அவரின் அம்மாவிற்கும் புத்திமதி சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி தான் வீட்டில் சும்மா இருப்பதால் தான் அம்மா கோபித்துக் கொண்டிருக்கிறார் என்பதால், தனக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு மீனாவிடம் கேட்டிருக்கிறார் தங்கமயில். மீனாவும் அதற்கு ரெடி பண்ணுகிறேன் என சொல்லி இருக்கிறார். தங்கமயில் வீட்டிற்கு வந்ததால் கோபித்துக் கொண்ட செந்தில் மீண்டும் மீனாவிடம் பேசத் தொடங்கி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கோமதி வீட்டிற்கு வரும் மீனா
Image Credit : jiohotstar

கோமதி வீட்டிற்கு வரும் மீனா

செந்திலும் மீனாவும், கோமதியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது மீனா, ராஜி எங்க என கேட்க, அவ கோச்சிங்கிற்காக கதவை சாத்திக்கிட்டு படிச்சிட்டு இருக்கா என கோமதி சொன்னதும், அப்படியா நான் போய் பார்க்கிறேன் என மீனா, ராஜி ரூமுக்கு சென்று பார்க்கும்போது, அவர் ஹெட்ஃபோனை போட்டுக்கொண்டு அசைன்மெண்ட் எழுதிக்கொண்டிருக்கிறார். ராஜி சுவற்றைப் பார்த்து திரும்பி இருப்பதால், அவர் பின்னாடி வந்து நின்ற மீனா, சும்மா இல்லாமல், கழுத்தில் கை வைக்கிறார். கதிர் தான் தன் கழுத்தில் கை வைக்கிறார் என நினைத்து, சும்மா இரு கதிர் என சொல்கிறார்.

Related Articles

Related image1
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Related image2
தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
35
மீனாவிடம் உலறிய ராஜி
Image Credit : jiohotstar

மீனாவிடம் உலறிய ராஜி

இதையடுத்து ராஜியின் முடியை விலக்கிவிட்டு காதில் கை வைக்கிறார் மீனா. சென்னைக்கு போயிட்டு வந்ததுல இருந்து நீ இப்படி தான் பண்ற என ராஜி உலற ஆரம்பிக்கிறார். அப்போ சென்னையில் இவங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்கு என யூகிக்கிறார் மீனா. அதன்பின்னர் தான் ராஜி திரும்பி பார்த்து மீனா வந்திருப்பதை கவனிக்கிறார். அய்யய்யோ இவங்ககிட்டயா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம் என ராஜி யோசிக்க, என்ன நடந்துச்சுனு ஒழுங்கா சொல்லு என மீனா கேட்கிறார். வேறுவழியில்லாமல் ராஜியும் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் ஒன்னுவிடாம சொல்லிவிடுகிறார்.

45
குழந்தை பெத்துக்க  ஆசைப்படும் மீனா
Image Credit : jiohotstar

குழந்தை பெத்துக்க ஆசைப்படும் மீனா

ஆக மொத்தம் சென்னைக்கு டிரெயினிங் போறேன்னு சொல்லிட்டு ஹனிமூன் கொண்டாடிட்டு வந்திருக்கீங்க என சொல்லி மீனா, ராஜியை கலாய்க்கிறார். இந்த விஷயத்தை மீனா, வாய்தவறி கோமதியிடமும் சொல்லிவிடுகிறார். அப்போது ராஜி வெட்கம் அடைகிறார். இதையடுத்து மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய கோமதி, நீயும் ஒரு பேரக் குழந்தையை பெற்றுக் கொடு என சொல்கிறார். அதன்பின்னர் செந்திலும், மீனாவும் வீட்டுக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் கர்ப்பிணிப்பெண் நடந்து செல்வதை பார்த்த மீனா, அத்தை சொன்ன விஷயத்தை செந்திலிடம் கூறுகிறார்.

55
அஞ்சலியிடம் உண்மையை சொன்ன சரவணன்
Image Credit : jiohotstar

அஞ்சலியிடம் உண்மையை சொன்ன சரவணன்

மறுபுறம் தங்கமயில் தன்னுடைய தோழிகளுக்கு போன் போட்டு ஏதாச்சும் வேலை இருக்குமா என கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் எதுவும் வேலை இல்லை என சொல்லிவிடுகிறார்கள். அதேபோல் சரவணன், அஞ்சலிக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தான் மனைவியை பிரிந்து வாழும் விஷயத்தையும், தங்களுக்கு என்ன பிரச்சனை, எதனால் இருவரும் டைவர்ஸ் அப்ளை பண்ணியிருக்கிறோம் என எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். இதன் பின்னர் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Related Stories
Recommended image1
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image2
தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved