- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனாவின் பிசினஸுக்கு வேட்டு வைக்க சிந்தாமணி உடன் கூட்டு சேரும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
மீனாவின் பிசினஸுக்கு வேட்டு வைக்க சிந்தாமணி உடன் கூட்டு சேரும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தன்னுடைய ரூட்டில் அடிக்கடி வருவதால், அவருக்கு பெரிய பிரச்சனையை உருவாக்க பிளான் போடும் ரோகிணி, என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் தோழி வித்யாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதையடுத்து கோவிலில் பத்திரிக்கை வைக்க வரும் வித்யாவை மீனா சந்திக்கிறார். அப்போது வித்யாவிடம் கிரீஷின் அம்மா நம்பர் வேண்டும் என கேட்கிறார் மீனா, எதற்காக என வித்யா கேட்க, அதற்கு அவர், அவங்க என்னுடைய வீட்டுக்காரரை ரெளடினு சொல்லிருக்காங்க. கிரீஷ் இவர் கூட பழகுனா ரெளடி ஆகிடுவான்னு சொல்லிருக்காங்க. அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்பதை அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். அதற்காக தான் நம்பர் கேட்டேன் என மீனா சொல்ல, அதற்கு வித்யா, தான் மகேஸ்வரியிடம் நம்பர் கேட்டு வாங்கித் தருவதாக சொல்கிறார்.
மீனாவுக்கு ஸ்கெட்ச் போடும் ரோகிணி
பின்னர் மகேஸ்வரி வீட்டுக்கு செல்லும் வித்யா, அங்கு வரும் ரோகிணியிடம் மீனா தன்னிடம் நம்பர் கேட்டது பற்றி சொல்கிறார். இதனால் உஷாரான ரோகிணி, மீனாவுக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லாததால் தான் கிரீஷ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். அவளுக்கு வேறு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் நம்ம ரூட்டுக்கு வர மாட்டார் என யோசிக்கும் ரோகிணி, பின்னர் வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு வரும் மனோஜ், தன்னுடைய டீலர் ஒருவரின் வீட்டு கல்யாணத்துக்கு மேக்கப் மற்றும் பூ ஆர்டர் வந்திருப்பதாக சொல்கிறார். மேக்கப் ஆர்டரை தான் எடுத்துக் கொண்ட ரோகிணி, பூ ஆர்டரை மீனாவுக்கு தரக்கூடாது என முடிவெடுக்கிறார்.
ரோகிணி - சிந்தாமணி கூட்டணி
பின்னர் விஜயாவின் யோகா கிளாசுக்கு செல்லும் ரோகிணி, அங்கு சிந்தாமணியை சந்திக்கிறார். அவரிடம் தனக்கு ஒரு பூ ஆர்டர் வந்திருப்பதாகவும், அதை உங்களுக்கு நான் தருகிறேன், அதற்கு நீங்கள் எனக்கு கைமாறாக ஒன்று செய்ய வேண்டும் என சொல்கிறார். என்ன என சிந்தாமணி கேட்க, கோவில் அருகே இருக்கும் மீனா அம்மாவின் பூக்கடையை தூக்க வேண்டும் என சொல்கிறார் ரோகிணி. அந்த பிரச்சனை வந்தால், மீனா இனி கிரீஷ் விவகாரத்தில் மூக்கை நுழைக்க மாட்டார் என்கிற ஐடியாவில் சிந்தாமணியிடம் டீல் பேசுகிறார் ரோகிணி. அதற்கு அவரும் சம்மதிக்கிறார்.
மீனாவுக்கு காத்திருக்கும் ஆபத்து
வீட்டில் மீனாவும், முத்துவும் பேசிக் கொள்கிறார்கள். அப்போது தனக்கு வரும் பூ ஆர்டரில் பாதியை சிந்தாமணி எடுத்துக் கொள்வதாக மீனா புலம்புகிறார். அவங்கள மீறி நான் வளர்ந்துவிடக் கூடாது என்பதால் தான் அவர் இப்படியெல்லாம் செய்கிறார் என்று மீனா சொல்கிறார். இப்படி தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சிந்தாமணியால், தன்னுடைய தொழிலுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை மீனா கண்டுபிடிப்பாரா? ரோகிணியுடன் சேர்ந்து சிந்தாமணி செய்ய உள்ள சூழ்ச்சியை தடுப்பாரா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.