'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா சொன்ன குட் நியூஸ்! குவியும் வாழ்த்து!
Gomathy Priya: 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும், கோமதி பிரியா தன்னுடைய புதிய புராஜெக்ட் பற்றிய தகவலை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த நடிகைகள்:
கேரளா, ஆந்திரா, மற்றும் மும்பையை சேர்ந்த நடிகைகள் தான் பெரும்பாலும் தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த 5 வருடங்களாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் நடிகைகளும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கி உள்ளனர்.
சும்மா இருந்தாரோ? இல்ல கடை பணத்தை திருடினாரோ? Pandian Stores 2 இந்த வாரம் என்ன நடக்கும்?
மதுரை பெண் கோமதி பிரியா:
இந்துஜா, வினுஷா, ரோஷ்ணி ஹரிபிரியன் போன்ற நடிகைகளின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் தான், மதுரை பெண்ணான கோமதி பிரியா. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்' என்கிற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் இந்த சீரியல் இவருக்கு பெரிதாக ரீச் கொடுக்காத நிலையில், கடந்த 2- வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' தொடர் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.
'கோன் பனேகா கரோர்பதி' வருமான ஆதாரம் என்ன? அமிதாப் இந்த ஷோவின் உரிமையாளரா?
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை:
முரட்டு தனமான, மற்றும் குடிகாரணமாக இருக்கும் முத்து என்பவரை எதிர்பாராத விதமாக திருமணம் செய்து கொள்ளும் மீனா, முத்துவை எப்படி மாற்றுகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். அமைதியும் - நிதானமும் கொண்ட மருமகளாக கோமதி பிரியா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர், கடந்த இரண்டு வருடமாக இவர் தான் சிறந்த நடிகைக்கான விஜய் டிவி விருதை வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
புதிய புராஜெக்ட்:
தமிழை தாண்டி, சில மலையாள மொழி தொடர்களிலும் கோமதி பிரியா நடித்துள்ளார். இந்த நிலையில், கோமதி பிரியா தன்னுடைய அடுத்த புராஜெக்ட் குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவிக்க, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அடியே சிறுக்கி மகளே:
அதாவது 'அடியே சிறுக்கி மகளே' என்கிற ஆல்பம் பாடலின் கோமதி பிரியா நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் நடித்துள்ளார். இந்த லிரிக்கல் பாடலை, விமல் ராஜ் என்பவர் பாடல் எழுதி, கம்போஸ் செய்து டைரக்ட் செய்துள்ளார் உள்ளார். கிராமத்து சாயலில்... காதலர் வண்டியில் பயணிக்கும் போது அவர்களுக்கு நேரும் அனுபவத்தை கூறவரும் இந்த பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.