- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மனோஜ் உடன் சேர ரோகிணி போடும் புது ஸ்கெட்ச்... அடங்காத நீத்துவால் அல்லல்படும் ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
மனோஜ் உடன் சேர ரோகிணி போடும் புது ஸ்கெட்ச்... அடங்காத நீத்துவால் அல்லல்படும் ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் உடன் மீண்டும் இணைய புது ஸ்கெட்ச் ஒன்றை போட்டிருக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் - ரோகிணி விவாகரத்து விவகாரம் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் நீத்துவால் ரவி மற்றும் ஸ்ருதி இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் இருவரும் தற்போது பிரிந்திருக்கிறார்கள். நீத்து தான் ரவியை காதலிப்பதாக சொல்ல அதனால் கோபித்துக் கொண்ட ஸ்ருதி, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் ரவி மற்றும் மீனா ஆகியோர் ஸ்ருதியின் வீட்டுக்கு சென்று அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் அந்த நீத்து தன்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் மீண்டும் வீட்டுக்கு வருவேன் என சொல்லி விட்டார் ஸ்ருதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.
ரவியை டார்ச்சர் பண்ணும் நீத்து
ஸ்ருதி வீட்டுக்கு வர மறுத்ததால் டென்ஷனாக இருந்த ரவியிடம் நீத்துவுக்கு போன் போட்டு இனி நீ அங்கு வேலைக்கு வர மாட்டேன்னு சொல்லு என கூறுகிறார் முத்து. இதையடுத்து ரவியும் நீத்துவுக்கு போன் போட்டு தான் வேலைக்கு வர மாட்டேன் என்று சொல்ல, அதைக்கேட்ட நீத்து அது எனக்கு தெரியும், அதனால் தான் முன்கூட்டியே நான் உனக்கு பதில் வேறு ஒரு செஃபை வேலைக்கு எடுத்துட்டேன் என கூறுகிறார். அதோடு நீ ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ரவி சொல்ல, அதெல்லாம் முடியாது என மறுக்கும் நீத்து, நான் இப்பவும் உன்னை தான் லவ் பண்றேன் என சொல்லுகிறார்.
மனோஜ் கொடுத்த முட்டாள்தனமான ஐடியா
நீத்துவின் பேச்சால் கடுப்பாகும் ரவி, போனை கட் பண்ணிவிடுகிறார். இதையடுத்து மனோஜ் தன் பங்கிற்கு ஒரு முட்டாள்தனமான ஐடியா ஒன்றை கொடுக்கிறார். பேசாம நீ நீத்துவின் காதலுக்கு ஓகே சொல்லி, அவளிடம் பேசி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வைத்து ரெண்டு பேரையும் மேனேஜ் பண்ணு என கூறுகிறார். இதைக்கேட்ட மனோஜ் மற்றும் ரவி காரித்துப்புகிறார்கள். பின்னர் வீட்டுக்குள் சென்று நீத்து மன்னிப்பு கேட்க மறுக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அப்போது ஸ்ருதியிடம் போனில் பேசி அவரை வீட்டுக்கு வர வைக்கிறேன் என பில்டப் கொடுத்து போன் போடும் விஜயாவுக்கு நீங்க யாரு என கேட்டு பல்பு கொடுக்கிறார் ஸ்ருதி.
ரோகிணியின் புது பிளான்
மறுபுறம் மனோஜிடம் இருந்து பறிபோன மிகப்பெரிய ஆர்டரை மீண்டும் கைப்பற்ற களமிறங்கி இருக்கிறார் ரோகிணி. அந்த கம்பெனி மேனேஜரை சந்தித்து, இந்த ஆர்டரை நீங்க கேன்சல் பண்ணியதால், என்னை வீட்டை விட்டே துரத்தி, தற்போது விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என வாய்க்கூசாமல் பொய் சொல்கிறார் ரோகிணி. அந்த மேனேஜரும் அவர் போடும் டிராமாவை உண்மை என நம்பி, சரி நான் பேசிப்பார்க்கிறேன் என கூறுகிறார். ஒருவேளை இந்த ஆர்டரை ரோகிணி மீண்டும் வாங்கினால், அவர் மனோஜ் உடன் மீண்டும் சேர வாய்ப்பு இருக்கிறது. ரோகிணியின் இந்த புது பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

