MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணியிடம் தனியாக சிக்கிய மனோஜின் வருங்கால மனைவி; சிந்தாமணியால் காத்திருக்கும் ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை

ரோகிணியிடம் தனியாக சிக்கிய மனோஜின் வருங்கால மனைவி; சிந்தாமணியால் காத்திருக்கும் ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னுடைய வருங்கால மனைவி ஹரிணி உடன் அவுட்டிங் சென்றபோது அவரிடம் ரோகிணி பேசி உள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 17 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவின் தம்பி சத்யாவும் அவருடைய காதலி ரேகாவும், மீனா தேர்தலில் வெற்றிபெற்றதை கொண்டாடுவதற்காக கேக் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சத்யாவையும், ரேகாவையும் ஃபாலோ பண்ணிக்கிட்டே சிந்தாமணியும் சென்றிருக்கிறார். அவர் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை நோட்டமிடுகிறார். மீனா கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுக்கிறார். இதையெல்லாம் காரில் அமர்ந்துகொண்டே பார்க்கும் சிந்தாமணி, அவர்களுக்கு தெரியாமல் காரில் இருந்தபடியே போட்டோவும் எடுக்கிறார். அதை வைத்து ஒரு ட்விஸ்ட் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரேகாவின் காதலை எதிர்க்கும் மீனா
Image Credit : jiohotstar

ரேகாவின் காதலை எதிர்க்கும் மீனா

இதன்பின்னர் தான் மிகப்பெரிய சம்பவமே இருக்கிறது. ரேகா, முத்து மற்றும் மீனாவிடம், நானும் உங்க தம்பியும் காதலிக்கிறோம் என சொல்கிறார். இதைக்கேட்டு அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க என ரேகா கேட்க, இந்த விஷயம் தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே என மீனா சொல்கிறார். அது ஓகே, ஆனால் இனி தான் ஒரு பிரச்சனை இருக்கிறது என ரேகா சொல்கிறார். என் கல்யாணத்துக்கு என்னுடைய அப்பா ஓகே சொல்லிடுவாரு, ஆனா எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க என கூறுகிறார். உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன் என மீனா சொல்கிறார்.

35
காதலுக்கு ஓகே சொன்ன முத்து
Image Credit : jiohotstar

காதலுக்கு ஓகே சொன்ன முத்து

நீங்க பேசுனாலும் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க, ஏன்னா எங்க அம்மாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியும்னு ரேகா சொல்ல, யார் அவங்க என மீனா கேட்டதும், நீங்க எலெக்‌ஷனில் யாரை எதிர்த்து போட்டிபோட்டு ஜெயிச்சங்களோ, அந்த சிந்தாமணி தான் என்னுடைய அம்மா என கூறுகிறார் ரேகா. இதைக்கேட்டதும் ஷாக் ஆகும் மீனா, இதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்காதீங்க. இனிமேல் லவ் பண்ணுவதை விட்டுவிடுங்கள் என சொல்கிறார் மீனா. பின்னர் முத்து மீனாவை சமாதானப்படுத்தி, அது எப்படி காதலிச்சுட்டு பாதியிலேயே விட முடியும். நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தீங்கன்னா உங்களை நான் சேர்த்து வைக்கிறேன் என முத்து சொல்ல மீனாவும் அதற்கு சம்மதிக்கிறார்.

45
ரோகிணியின் சூழ்ச்சி
Image Credit : jiohotstar

ரோகிணியின் சூழ்ச்சி

மறுபுறம் மனோஜ் தன்னுடைய வருங்கால மனைவி ஹரிணியை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். ஆட்டோ குலுக்குன குலுக்குல ஹரினிக்கு வாமிட் வருகிறது. உடனே ஆட்டோவை ஓரமாக நிப்பாட்ட சொல்லும் மனோஜ், ஹரிணிக்கு கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்புகிறார். மனோஜ் கிளம்பி சென்றதும், அங்கு ரோகிணி வருகிறார். அவர் ஹரிணியிடம் நல்லவர் போல் பேசி, அவருக்கு வாமிட் வராமல் இருக்க ஒரு மிட்டாயை கொடுத்துச் செல்வதோடு, அருகில் தான் தன்னுடைய பியூட்டி பார்லர் இருக்கிறது. அங்கு வாங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.

55
சிந்தாமணி கொடுத்த ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

சிந்தாமணி கொடுத்த ட்விஸ்ட்

ரேகாவின் காதல் விஷயம் தெரிந்ததும், சிந்தாமணி நேராக தன்னுடைய கணவரின் ஆபிஸுக்கு செல்கிறார். அங்கு வந்ததும் உங்க ஆபிஸில் வேலை பார்க்கும் சத்யாவை தான் நம்ம பொண்ணு ரேகா காதலிக்கிறா என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார் சிந்தாமணி. அதை அவர் நம்ப வேண்டும் என்பதற்காக சத்யாவும், ரேகாவும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை காட்டுகிறார் சிந்தாமணி. இதனால் ரேகாவின் காதலுக்கு சிந்தாமணியின் கணவர் ஓகே சொல்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
Recommended image2
Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?
Related Stories
Recommended image1
நீத்துவுக்கு பளார் என அறைவிட்ட மீனா; மனோஜுக்கு செக் வைத்த ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
சிந்தாமணியால் பிரேக் அப் ஆகும் சத்யா - ரேகாவின் காதல்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved