- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கணவருக்காக அம்மாவிடம் பொய் சொல்லிய ரேவதி – கார்த்திக் எஸ்கேப் ஆனது எப்படி? கார்த்திகை தீபம் அப்டேட்!
கணவருக்காக அம்மாவிடம் பொய் சொல்லிய ரேவதி – கார்த்திக் எஸ்கேப் ஆனது எப்படி? கார்த்திகை தீபம் அப்டேட்!
Revathi Saves Karthik Raja From Chandrakala Plan : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் எஸ்கேப் ஆனது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கணவருக்காக அம்மாவிடம் பொய் சொல்லிய ரேவதி – கார்த்திக் எஸ்கேப் ஆனது எப்படி? கார்த்திகை தீபம் அப்டேட்!
Revathi Saves Karthik Raja From Chandrakala Plan : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் கார்த்திகை தீபம் 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் மாமியார் வீட்டில் டிரைவராக வேலை பார்க்கும் கார்த்திக் ராஜாவின் உண்மை முகத்தை எப்படியாவது அக்காவிடம் காண்பித்து விட வேண்டும் என்று சந்திரகலா தன்னால் முடிந்த எல்லா பிளான்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் கோயில் இடம். இது கார்த்திக் ராஜாவின் அம்மா அபிராமி பெயரில் இருந்தது. ஆனால், அவர் லாரி விபத்தில் உயிரிழந்த் நிலையில் அவரது வாரிசு பெயரில் தான் கோயில் இடம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அரசு கோயிலை எடுத்துக் கொள்ளும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அம்மாவிடம் பொய் சொல்லிய ரேவதி
இந்த நிலையில் தான் அண்ணன்களுடன் இணைந்து பதிவு செய்ய வரும் கார்த்திக் ராஜாவை எப்படியாவது அக்காவிடம் மாட்டிவிட அக்காவையும் பதிவு செய்யும் இடத்திற்கு சந்திரகலா அழைத்து வந்திருந்தார். ஆனால், எப்படியும் இன்று கார்த்திக் ராஜா அக்காவிடம் சிக்கிக் கொள்வார் என்று எதிர்பார்த்திருந்த சந்திரகலாவிற்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
கணவரை காப்பாற்றிய ரேவதி
இதற்கு முக்கிய காரணம் ரேவதி. அவர், தனது கணவர் கார்த்திக் ராஜாவை காப்பாற்ற, அருகிலுள்ள மருத்துவனைக்கு சென்று அங்கிருந்து அம்மாவிற்கு போன் போட்டு நாங்கள், இந்த மாதிரி மருத்துவமனையிலிருந்து பேசுகிறோம். இங்கு, உங்களது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி, தனது கணவருக்காக உடனே புறப்பட்டுள்ளார். ஆனால், அவரை தடுத்து நிறுத்து எல்லா வேளைகளையும் செய்தார், உடனே மருத்துவமனைக்கு போன் போட்டு கேள் என்றார். சாமுண்டீஸ்வரியும் அதன்படி செய்ய, அது உண்மை என்று தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
அதன் பிறகு கார்த்திக் வந்து அண்ணன்களுடன் இணைந்து பத்திரப்பதிவில் கையெழுத்திட்டு கோயிலை தங்களது பெயரில் மாற்றிக் கொண்டார். கோயில் திரும்ப கிடைத்ததைத் தொடர்ந்து பரமேஸ்வரி ரொம்பவே ஹேப்பி. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.