- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார் ஓட்டும் போது Accidentல் சிக்கிய ராஜீ – குறுக்க வந்து விழுந்தது யார் தெரியுமா? அதிர்ச்சியில் கதிர்!
கார் ஓட்டும் போது Accidentல் சிக்கிய ராஜீ – குறுக்க வந்து விழுந்தது யார் தெரியுமா? அதிர்ச்சியில் கதிர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கார் ஓட்டி பழகும் போது ராஜீ விபத்தில் சிக்கியுள்ளார். அவருக்கு என்ன ஆச்சு என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எப்போதும் அப்பாவை எதிர்த்து எதிர்த்து பேசிக் கொண்டு, அவர் சொல்வதை கேட்காமல் திமிராக சுற்றிக் கொண்டிருக்கும் கதிர் தான் இப்போது அப்பாவிற்கு பிடித்த பிள்ளை. சொந்தமாக அப்பாவின் பெயரில் பாண்டியன் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் ஆரம்பித்து இப்போது சொந்தமாக பிஸினஸ் செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக ராஜீ இருந்து வருகிறார். என்னதான் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும், நாளடைவியில் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்து இப்போது கணவன் மனைவிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் ராஜீ
கதிருக்கு ஒன்று என்றால் ராஜீயால் தாங்க முடியாது, அதே போன்று ராஜீக்கு ஏதும் ஒன்று என்றால் அதை கதிரால் தாங்க முடியாது. இப்படி இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டுள்ளனர். ராஜீயை போலீஸ் வேலைக்கு படிக்க வைத்து வருகிறார். இந்த சூழலில் தான் டிராவல்ஸில் கார் இருந்தும் டிரைவர் இல்லாத சூழல் ஏற்பட்டது. அப்போது, கதிர் நான் வருகிறேன் என்று சொல்ல ராஜீ அதெல்லாம் முடியாது நீ டிரைவ் பண்ண வேண்டாம் என்று சொல்ல உடனே கதிர் அந்த கஸ்டமருக்கு வேறொரு கார் புக் செய்து அனுப்பி வைத்தார்.
கார் விபத்தில் ராஜீ மற்றும் குமாரு
இப்படியொரு சூழல் வரும் போது தான் தனது கணவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜீ கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதைப் பற்றி கதிரிடமும் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 600ஆவது எபிசோடில் ராஜிக்கு கதிர் டிரைவிங் கற்று கொடுக்கிறார். அப்போது இது தான் கிளட்ச், இது பிரேக், இது ஸ்டீயரிங், இது ஆக்சிலரேட்டர் என்று ஒவ்வொன்றாக சொல்லி கற்றுக் கொடுக்கிறார்.
எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்து
ஒரு கட்டத்தில் கியர் மாற்றும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இதனால், கதிர் மற்றும் ராஜீ இருவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் முதலில் காரைவிட்டு இறங்கிய கதிர் யார் விபத்தில் சிக்கியது என்று பார்த்துவிட்டு அமைதியாக நிற்கிறார். இதே போன்று காரிலிருந்து இறங்கிய ராஜீ தனது அண்ணனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிச் சென்று தூக்கிவிடுகிறார்.
ஹுருன் இந்தியா 2025 பணக்காரர்கள் பட்டியல்: ரூ.12.490 கோடியுடன் முதலிடம் பிடித்த ஷாருக் கான்!
அடி ஏதும் பட்டதா, காயம் ஏற்பட்டதா
அடி ஏதும் பட்டதா, காயம் ஏற்பட்டதா என்றெல்லாம் விசாரிக்கிறார். தனது தங்கையைப் பார்த்ததும் நீதான் கார் ஓட்டுன, ஓ இப்போதுதான் கத்துக்கிறயா என்றெல்லாம் கேட்டு, சரி நன்றாக கத்துக்கோ ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், கதிர் தப்பு எல்லாம் நம்ம மீது. ஆனால், உன்னுடைய அண்ணன் எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டார் என்று கூறுகிறார்.
அவன் திருந்திவிட்டான்
அதற்கு ராஜீயோ ஆமாம், அவன் திருந்திவிட்டான் என்று கூறுகிறார். இந்த விபத்துக்கு பிறகு ராஜீக்கு மறுபடியும் கதிர் கற்றுக் கொடுக்கிறார். பிறகு டிராவல்ஸ் அலுவலகத்தில் கதிர் கையில் சிகரெட் இருப்பது பார்த்து கோபம் கொள்கிறார். உண்மையில் அந்த சிக்ரெட் கதிரின் நண்பருடையது என்று தெரிந்து அவருக்கு அறிவுரை வழங்குகிறார்.
எல்லாம் ஒரிஜினல்தான்! பிகினியில் சாய் பல்லவி, ரசிகர்கள் அதிர்ச்சி; நடிகை விளக்கம்!