MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சத்யா கேரக்டருக்கு குட் பை சொல்லும் டெல்னா டேவிஸ்... ஆடுகளம் சீரியலில் இருந்து விலக காரணம் என்ன?

சத்யா கேரக்டருக்கு குட் பை சொல்லும் டெல்னா டேவிஸ்... ஆடுகளம் சீரியலில் இருந்து விலக காரணம் என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் என்கிற நெடுந்தொடரில் சத்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை டெல்னா டேவிஸ், அதிலிருந்து விலகி உள்ளாராம். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 10 2026, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Delna Davis exit Aadukalam serial
Image Credit : SUN TV You Tube

Delna Davis exit Aadukalam serial

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆடுகளம்’ தொடரைச் சுற்றி புதிய திருப்பம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. இந்த தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை டெல்னா டேவிஸ் விரைவில் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனியர் நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சச்சு உள்ளிட்டோருடன் காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ் போன்றோர் இணைந்து நடித்துவரும் இந்த தொடர் ஆரம்பத்தில் பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் சமீபத்தில் இதை மதிய நேர ஒளிபரப்புக்கு மாற்றியமைத்தது சன் டிவி.

25
ஆடுகளம் சீரியலில் இருந்து விலகும் நாயகி
Image Credit : Sun TV You Tube

ஆடுகளம் சீரியலில் இருந்து விலகும் நாயகி

இந்த மாற்றம் தொடர்பாக தொடரின் முக்கிய நடிகர், நடிகைகள் சிலர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக “பிரைம் டைம் என கூறி பின்னர் நேரத்தை மாற்றுவது ஏன்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. பின்னர் சேனல் மற்றும் தயாரிப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவரும் தகவலின்படி, ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் டெல்னா டேவிஸ், தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். தனது தீர்மானத்தை சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு தெளிவாக தெரிவித்துள்ளாராம்.

Related Articles

Related image1
செல்வநாயகியிடம் உண்மையை உடைத்த சஞ்சய்; சத்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியா?ஆடுகளம் சீரியல் அதிரடி மூவ்மெண்ட்ஸ்!
Related image2
ஆடுகளம் சீரியல் சத்யா ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா? டெல்னா டேவிஸின் சீக்ரெட் சொத்து விவரம் இதோ!
35
டெல்னா டேவிஸ் முடிவுக்கு காரணம் என்ன?
Image Credit : Sun TV Instagram

டெல்னா டேவிஸ் முடிவுக்கு காரணம் என்ன?

அவரை சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்தபோதிலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த மாத ஷூட்டிங்கை முடித்த பிறகோ அல்லது அடுத்த மாதத்துடன் தொடரிலிருந்து முழுமையாக விலக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு ‘ஆடுகளம்’ தொடரின் கதை நகர்வில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். டெல்னா டேவிஸ் இந்த தொடரில் இருந்து விலகினால் அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் குறைய வாய்ப்பு உள்ளது.

45
நேரம் மாற்றத்தால் பின்னடைவு
Image Credit : Sun TV You Tube

நேரம் மாற்றத்தால் பின்னடைவு

ஆடுகளம் சீரியல் சன் டிவியில் தொடங்கப்பட்டபோது தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பி வந்தனர். இந்த சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக இருப்பதனால் அதனை வேறு டைம் ஸ்லாட்டுக்கு மாற்றுமாறும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலை தூக்கி மதிய நேரத்தில் போட்டு அதிர்ச்சி கொடுத்தது சன் டிவி. மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டதில் இருந்தே இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் கடும் சரிவை சந்திக்க தொடங்கியது.

55
டெல்னாவுக்கு பதில் யார்?
Image Credit : Delna Davis Instagram

டெல்னாவுக்கு பதில் யார்?

ஆடுகளம் சீரியல் ஒளிபரப்பாகி வந்த இரவு 10 மணிக்கு தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது. நேர மாற்றத்தால் நல்ல நல்ல சீரியல்களிலும் பெரும் குழப்பம் ஏற்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. தற்போது டெல்னா டேவிஸ் ஆடுகளம் சீரியலில் இருந்து விலக முடிவு செய்து உள்ளதால், அவருக்கு பதில் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்து சீரியல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். டெல்னாவுக்கு பதிலாக அந்த சீரியலில் நடிக்கும் நடிகை பற்றிய அப்டேட் இன்னும் சில வாரங்களில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எலெக்‌ஷனில் காத்திருந்த ட்விஸ்ட்... மீனாவை டெபாசிட் இழக்க செய்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
குணசேகரனை பழிவாங்க ராவணனோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி; ட்விஸ்ட் கொடுக்கும் அப்பத்தா - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
யார் இந்த சூரியகலா? கார்த்திக்கின் பரம எதிரி ரியா மீண்டும் வந்தாச்சு! கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்!
Related Stories
Recommended image1
செல்வநாயகியிடம் உண்மையை உடைத்த சஞ்சய்; சத்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியா?ஆடுகளம் சீரியல் அதிரடி மூவ்மெண்ட்ஸ்!
Recommended image2
ஆடுகளம் சீரியல் சத்யா ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா? டெல்னா டேவிஸின் சீக்ரெட் சொத்து விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved