எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல இருந்து ஆரம்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 589ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் கதிருக்கு நிலத்தை விற்று பணம் கொடுக்கிறார். மீனாவின் அப்பாவும், அம்மாவும் வேறு வந்திருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியலில் இதுவரையில் அரசி மற்றும் குமரவேலுவை வைத்து கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அது முடிந்ததும், அரசி மற்றும் சதீஷ் திருமண பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதுவும் இல்லை என்று ஆனது. அதோடு பாண்டியனின் அக்கா உமா மகேஸ்வரி மற்றும் சதீஷ் தொடர்பான காட்சிகள் அதோடு முடிவுற்றது. இந்த நிலையில் தான் இப்போது பாண்டியனின் பழைய டாபிக் மீண்டும் ஆரம்பமானது.
கடைசியாக பங்கேற்ற Top Cooku Dupe Cooku season 2- விசில் அடிச்சுக்கிட்டு வெளியேறிய ரோபோ சங்கர்!
மீனா மற்றும் செந்தில் வாக்குவாதம்
அதாவது தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று மீனா வாங்கிய ரூ.10 லட்சத்திற்கான லோன் மற்றும் கதிருக்கு டிராவல்ஸ் வைப்பதற்கு தேவையான பணம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளார். இதைப் பற்றி குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாண்டியன் இன்று பேசினார். அதில், செந்தில் மற்றும் கதிர் இருவரும் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கவே, பாண்டியன் முதல் மாதம் சம்பளம் வாங்கி செந்தில் தாம் தூம் என்று குதித்ததை சுட்டிக் காட்டினார்.
ஷாக்கிங் நியூஸ் – ரோபோ சங்கர் மறைவு; உடல் உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றாரா?
டிராவல்ஸ் வைக்க இருக்கும் கதிர்
அதனால் நான் கொடுப்பதை பெற்றுக் கொண்டு கடனை அடைப்பதோடு டிராவல்ஸ் வைப்பதற்கான வேலையிலும் இறங்க வேண்டும் என்று பாண்டியன் ஸ்டிரிக்டா சொல்லவே, சரவணனும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், தங்கமயிலோ மீண்டும் பஞ்சாயத்தை கூட்டினார். நான் மாமாவிடம் கேட்பேன். உங்களது தலையில் மசாலா அறைக்கிறார்கள். சொத்தை 3 பங்கா தான் போட வேண்டும். அதில் என்ன ஓரவஞ்சனை. உங்களது 2 தம்பிகளுக்கு மட்டும் கொடுக்கிறார்கள் என்று தங்கமயில் ஆரம்பிக்க, சரவணன் சரியான பதிலடி கொடுத்து அவரை ஆஃப் செய்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஏன் அப்பா கொடுக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ற என்பது பற்றி கேட்க, அதற்கு கதிர் என்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து வேர்வை சிந்தி வாங்கிய நிலம் அது. அவருக்கு என்று எதுவும் அவர் இதுவரையில் செய்து கொள்ளவில்லை. இந்த சூழலில் தான் அவர் கொடுக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்கிறேன் என்றார்.
சுயநலவாதியான செந்தில்
கதிர் அப்பாவின் மீது பாசமாக இருக்கும் சூழலில் செந்தில் அரசு வேலைக்கு சென்ற பிறகு சுயநலவாதியாக மாறிவிட்டார். அவர், நான் கடையில் வேலை பார்த்த போது சம்பளம் கொடுத்தாரா இல்லையே, அப்புறம் என்ன, என்னுடைய அண்ணன் சரவணன் கடைக்கு டிராமா பண்ணுகிறான். அவன் கடையை எழுதி வாங்கிக் கொள்வான். எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் திருப்பி தருகிறார் என்றார். ஆனால், மீனா குடும்பத்தின் மீதும், மாமா மீதும் பாசமாக இருந்தார்.
பாண்டியன் வீட்டிற்கு வந்த மீனாவின் அப்பாவும், அம்மாவும்
இறுதியாக மீனாவின் அப்பாவும், அம்மாவும் பாண்டியன் வரச் சொல்லி வீட்டிற்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் மீனாவிற்கு போன் பண்ணவில்லை. மாறாக, பாண்டியன் யாருக்கும் தெரியாமல் தான் மீனா இந்த லோனை வாங்கிக் கொடுத்தார். இப்படியொரு மருமகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். ஆனால், அதற்கு மீனாவின் அப்பா, ஆமாம் ஆமாம், காசு, பணம் கொடுக்கிற மருமகள் கிடைக்க கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும் என்று பேச, அது பாண்டியனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
பாண்டியன் எதற்காக வரச் சொன்னார்?
உண்மையில் பாண்டியன் எதற்காக வரச் சொன்னார் என்பது பற்றி மீனாவின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் பேசியது தவறு என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பாண்டியன் மீனா பெற்றுக் கொடுத்து ரூ.10 லட்சத்திற்கான லோன் கடனை திரும்ப அவரிடம் கொடுப்பார். இது தொடர்பான காட்சிகள் நாளைய 590ஆவது எபிசோடில் பார்க்கலாம்.