- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டான்ஸ் போட்டிக்கு அனுமதி இல்ல; உண்ணாவிரதம் இருந்த ராஜீ; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
டான்ஸ் போட்டிக்கு அனுமதி இல்ல; உண்ணாவிரதம் இருந்த ராஜீ; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
Raji Hunger Strike for dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 575ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Raji Hunger Strike for dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 575ஆவது எபிசோடில் அரசி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரை பார்த்த குமரவேல், அவரிடம் பேச சென்றார். அந்த நெரம் பார்த்து சரவணன் வரை அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து வீட்டில் ராஜீயின் டான்ஸ் கச்சேரி பற்றி டாபிக் ஓடியது. நேற்று முடியாது என்று சொன்ன கதிரிடம் இன்றும் அனுமதி கேட்டார். அவர் இன்றும் முடியாது என்று சொல்லவே உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று சாப்பிடாமல் இருந்தார்.
திரும்ப திரும்ப ஒவ்வொருவரது காலிலும் விழுந்து சென்னையில் நடக்கும் டான்ஸ் போட்டிக்கு அனுமதி கேட்டார். முதலில் பாண்டியனிடம் கேட்டார். அவர் கொடுக்கவில்லை. நீ போலீஸ் வேலைக்கு போ, அதற்கு நல்லா படி. அது போதும் டான்ஸ் வேண்டாம், நீ அம்பாசமுத்திரம் சென்று டான்ஸ் ஆடியதே எனக்கு பிடிக்கவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து மீனாவிடம் சென்று சிபாரிசு கேட்டார். அவரும் முடியாது என்று சொல்லவே, கோமதியிடம் கேட்டு, பிறகு சரவணனிடம் கேட்டார். அதன் பின்னர் சித்தப்பாவான பழனிவேலிடம் சென்று அனுமதி கேட்டார். அவரது காலில் கூட விழ பார்த்தார். ஆனால், முடியாது என்றார். பின்னர் அரசியிடம் கேட்டு கடைசியில் பாண்டியனிடம் வந்தார். கடைசி வரை யாருமே அனுமதி தரவில்லை.
இதனால் கோபமடைந்த ராஜீ மீண்டும் தனது ரூமிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த கதிர், அவரை அழைத்துக் கொண்டு வெளியில் கால்நடையாக நடந்து சென்றார். மீண்டும் மீண்டும் அவரிடம்கேட்டார், எதற்காக சென்னைக்கு போற என்று கேட்கவே, அவரோ, எனக்கு டான்ஸ் ரொம்பவே பிடிக்கும். அதனால், நான் செல்கிறேன், எனக்காக செல்கிறேன். உனக்காக இல்லை என்றார். கதிர் என்னுடைய அப்பா எனக்கு உதவி செய்கிறேன் என்று வரும் போது கூட நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
அப்படியிருக்கும் போது நீ டான்ஸ் ஆடி ஜெயித்து கோண்டு வரும் ரூ.10 லட்சம் பணத்தை நான் வாங்கிக் கொள்வேனா? வாங்கவே மாட்டேன் என்றார். அதன் பிறகு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தார். அதாவது பாண்டியனிடம் சென்று அனுமதி கேட்டார். அப்போதும் பாண்டியன் முடியாது என்றார். ஒரு கட்டத்தில் உன்னுடைய முடிவுப்படி நீ செய்து கொள் என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை பாண்டியன் மற்றும் கதிர் ஆகியோர் அனுமதி கொடுக்கவில்லை என்றாலும், அவர்களது பேச்சைக் கேட்காமல் சென்னைக்கு புறப்பட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.