- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தங்கமயிலால் வந்த சண்டை.. செந்திலை வீட்டை விட்டு துரத்திய மீனா! இன்றைய எபிசோட் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தங்கமயிலால் வந்த சண்டை.. செந்திலை வீட்டை விட்டு துரத்திய மீனா! இன்றைய எபிசோட் அப்டேட்!
Pandian Stores 2 Serial Today 766th Episode: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் மற்றும் மீனா இருவரும் சந்தித்து பேசுவதை நேரில் பார்த்த மீனாவுடன் சண்டை போட்ட நிலையில் செந்திலை தனது வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.

Pandian Stores 2 Serial
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சமீப காலமாக சீரியலின் கதை கொஞ்சம் மாறி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதாவது, ஆரம்பத்தில் சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனையில் சரவணனுக்கு ஆதரவாகவும், தங்கமயிலுக்கு எதிராகவும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஜெயிலுக்கு அனுப்பும் காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதன் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்களும் சரவணனுக்கும், பாண்டியன் குடும்பத்திற்கும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
Senthil and Meena Fight
ஆனால், இப்போது தங்கமயில் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அவர் முற்றிலும் மாறியதைத் தொடர்ந்து எல்லோரும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். மீனா முதல் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் வரை எல்லோருமே ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மீனா தனது குடும்பத்திற்கு தெரியாமல் குறிப்பாக செந்திலுக்கு தெரியாமல் தங்கமயிலுடன் பேசி வருகிறார். இதே போன்று கதிர் மற்றும் ராஜீயின் வாழ்க்கையில் இப்போது புதிய திருப்பமாக ராஜீயின் அப்பா முத்துவேலும், கதிரும் குடும்ப பகையை மறந்து சமாதானம் ஆகும் காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 766ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் மீனாவிற்கு இடையில் சண்டை முற்றிய நிலையில் செந்தில் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்று முழுவதுமாக பார்க்கலாம்.
Thangamayil Secrets
முதலில் வழக்கம் போன்று தங்கமயில் மற்றும் மீனா இருவரும் கோயிலில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து பேசினர். பல முறை மீனாவிற்கு வார்னிங் கொடுத்தும் அவர் கேட்பதாக தெரியவில்லை. எனினும், மீனா வழக்கம் போல் ஆபிசிற்கு செல்வது போன்று செந்திலை ஏமாற்றிவிட்டு தங்க்மயிலை பார்க்க கோயிலுக்கு சென்றார். அங்கு தங்கமயில் மற்றும் மீனா இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மீனா மீது சந்தேகம் கொண்ட செந்தில் கோயிலுக்கு அவரை பின் தொடர்ந்து வந்தார். அப்போது மீனா மற்றும் தங்கமயில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
Pandian Stores 2 Serial Today 766th Episode
ஏதோ கள்ளக் காதலுடன் பேசிக் கொண்டிருந்ததை நேரில் பார்த்து கோபம் கொண்டது போன்று செந்திலுக்கு அப்படியொரு கோபம். வலியும், வேதனையும் நிறைந்த ஒருவனுக்கு அப்படியொரு கோபம் வரும் அல்லவா. ஏனென்றால் தங்கமயில் மற்றும் அவரது குடும்பத்தினரால் அனுபவித்த கஷ்டங்களை செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதன் காரணமாகத்தான் தங்கமயில் உடன் பேசக் கூடாது அவரது நம்பரை பிளாக் செய்ய வேண்டும் என்று செந்தில் மீனாவிடம் அடிக்கடி சொல்லி அவரிடம் சண்டை போட்டு வந்தார்.
Pandian and Gomathi
இப்போது கோயிலிலும் அதே தான். கொஞ்சம் ஓவராக பேசி அவருடன் சண்டை போட்டார். இந்த சண்டை வீடு வரை சென்று கடைசியில் மீனாவை வீட்டை விட்டு துரத்த முயன்ற செந்திலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், அது மீனா வீடு. அதனால், மீனா செந்திலை வீட்டை விட்டு துரத்திவிட்டார். வேறு வழியில்லாத செந்தில் நேராக தனது வீட்டிற்கு வந்தார். அங்கு, தனது அம்மாவிடம் மீனாவைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்ல ஆரம்பித்தார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்த நிலையில், நாளைய எபிசோடிற்கான புரோமோ வெளியானது. அதில், தங்கமயில் மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். இதைக் கேட்டு கோமதி, பாண்டியன் அதிர்ச்சி அடையவே மீனா என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அதாவது, தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று அதிர்ச்சிகரமான விசயத்தை சொல்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.