MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாண்டியன்; அன்பால் ஒன்றிணைந்த கோமதி அண்ட் பாண்டியன்: Pandian Stores 2 சீரியலில் மலரும் க்யூட் ரொமான்ஸ்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாண்டியன்; அன்பால் ஒன்றிணைந்த கோமதி அண்ட் பாண்டியன்: Pandian Stores 2 சீரியலில் மலரும் க்யூட் ரொமான்ஸ்!

Pandian Stores 2 Serial This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

3 Min read
Author : Rsiva kumar
Published : Apr 05 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
Image Credit : Jio Hot Star

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் ராஜீக்கு தனது தனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்தது தெரிய வரவே பாண்டியனுக்கும் கோமதிக்கும் இடையில் சண்டை உண்டானது. இதையடுத்து கோமதி உடன் பாண்டியன் பேசுவதை தவிர்த்தார். திருமணமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இப்படி கோமதி மற்றும் பாண்டியன் இருவரும் பேசாமல் இருந்ததில்லை. இதன் காரணமாக கோமதியால் தனது கணவரிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பல முறை பேசுவதற்கு முயற்சி செய்தார். சில சந்தர்ப்பங்களில் கடிதம் கூட எழுதி கொடுத்தார். ஆனால், எதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை.

27
Pandian Stores 2 Serial 6th to 11th April 2026 Promo Video
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial 6th to 11th April 2026 Promo Video

பிறகு கோமதியும் பேசுவதை நிறுத்திவிட்டார். அவருக்கு எந்த வேலையும் செய்வதில்லை என்று முடிவு செய்தார். அதாவது அவரது டிரஸை துவைப்பதில்லை. அவருக்கு சமையல் பரிமாறுவதில்லை என்று எந்த வேலையும் செய்யவில்லை. இதனால் பாண்டியன் கடையில் வாங்கி வந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த வார எபிசோடில் கோமதி வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்தார். சரவணன் மற்றும் பழனிவேல் இருவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

37
Pandian Stores 2 Serial This Week Promo
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Serial This Week Promo

தனது மனைவி கோமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்து பதறிய பாண்டியன் உடனே மருத்துவமனைக்கு சென்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் விழித்த கோமதியை பாண்டியன் அருகில் இருந்து பார்த்தார். கண்ணீர் விட்டு அழுதார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய பிறகு என்ன நடந்தது, வீட்டில் யாரும் இல்லையா என்றெல்லாம் ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர். அப்போதுதான் என்ன நடந்தது, வீட்டில் யார் இருந்தாங்க என்று சொல்ல அவர் சொல்வதைக் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் பாண்டியன் தான் வீட்டில் இருந்தார். அவரை கூப்பிட்டேன், அவர் காதில் வாங்காமல் சென்றுவிட்டார் என்றார்.

47
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

இதற்கு பதிலளித்த பாண்டியன், இதற்கு முன் இப்படியெல்லாம் நாடகம் ஆடி என்னிடம் பேச முயற்சி செய்தாள், அது போன்று தான் இப்பவும் செய்கிறாள் என்று நினைத்தேன் என்றார். இப்படியே சென்று கொண்டிருக்க, பாண்டியன் வழிய வழிய பேசவே, கோமதி பேசவே இல்லை. இந்த நிலையில் தான் ஒருவேளை நான் இறந்துவிட்டாள் என்ன செய்வீங்க என்று ஒவ்வொருவரிடம் கேட்க அதற்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவோம், எது எங்க இருக்கிறது என்று தெரியாது என்று ஒவ்வொருவரும் பேசினர்.

57
மீண்டும் ஒன்று சேர்ந்த பாண்டியன் மற்றும் கோமதி
Image Credit : jiohotstar

மீண்டும் ஒன்று சேர்ந்த பாண்டியன் மற்றும் கோமதி

இதனால் கோமதி ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, வீட்டு சாவி, வீட்டில் எது எங்கிருக்கிறது என்று எல்லோரிடம் சொல்லிவிட்டார். நான் எங்கேயோ போகிறேன் என்று புறப்பட்டார். மற்றவர்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் மற்றவர்கள் புறப்பட்டு செல்லும் போது நான் போக கூடாதா? நான் போறதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பினார். அவருக்கு பின்னாடியே அவரை சமாதானப்படுத்த பாண்டியன் கிளம்பினார். கோமதி முன்னாடி செல்ல பாண்டியன் பின்னாடியே கோமதி மோமதி என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார். அதோடு கடந்த வார எபிசோடு முடிந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.

67
கோமதியை சமாதானப்படுத்திய பாண்டியன்
Image Credit : jiohotstar

கோமதியை சமாதானப்படுத்திய பாண்டியன்

அதில், இருவரும் ஒரு கோயில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு திருமணத்திற்கு பிறகு உன்னோட அண்ணன்களுக்கு பயந்து கொண்டு ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தோம் என்றார் பாண்டியன். அதன் பிறகு இன்று தான் காலையிலிருந்து என்னுடன் இருந்திருக்கீங்க என்றார். நீ போட்ட டிராமா எல்லாம் என்னிடம் பேசுவதற்கு தான் என்று தெரியாமல் உன்னை கஷ்டப்படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று அவரது காலை தொட்டு மன்னிப்பு கேட்டார். 

வசூல் வேட்டையில் லீடர்.. மந்தமான ஹேப்பி ராஜ்! முழு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ!

77
வீட்டை விட்டு புறப்பட்ட கோமதி
Image Credit : jiohotstar

வீட்டை விட்டு புறப்பட்ட கோமதி

இதற்கு பதிலாக கதிருக்கு உங்களுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து வைத்தது என்னுடைய தப்பு தான் என்று கோமதியும் மன்னிப்பு கேட்டார். உனக்காக இனி நான் என்னை மாற்றி கொள்கிறேன் என்று பாண்டியன் பேசுவதை கேட்டு கோமதி புன்னகைத்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ முடிந்தது. இனி இந்த வாரம் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த புரோமோவில் தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறவில்லை.

கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!
Recommended image2
பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
தேர்தலில் மீனாவை டம்மி பீஸ் ஆக்க சிந்தாமணி கையிலெடுக்கும் ஆயுதம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved