- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அரசி அரசி என்று கூப்பிட்ட குமரவேல் – பஞ்சாயத்துக்கு வந்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
அரசி அரசி என்று கூப்பிட்ட குமரவேல் – பஞ்சாயத்துக்கு வந்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Kumaravel wants to Talk With Arasi in Pandian Stores 2 Serial :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசியை பார்த்த குமரவேல் அரசி அரசி என்று கூப்பிட அப்போது கதிர் அங்கு வர அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

அரசி அரசி என்று கூப்பிட்ட குமரவேல் – பஞ்சாயத்துக்கு வந்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்று மீனாவின் அப்பாவிற்கு அரசு வேலைக்கு தனது மகள் தான் லோன் வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்தது. ஒரு புறம் கடைக்கு சென்ற பாண்டியன் காலில் கட்டு போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்தார். இறுதியாக ராஜீயை சந்தித்து பேசிய குமரவேல் அரசி எப்படி இருக்கிறார், அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சொல் என்றார். அதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
குமரவேல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இனி இன்று என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து அவர் கோபமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். முதலில் நாம் தான் மீனாவிற்கு ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை நாட்கள் கொடுக்காமல் இருந்தது தவறு தான். இனிமேலும் அப்படியே விடவும் முடியாது. அதனால், நம்முடைய வயல் நிலத்தை விற்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான ஏற்பாட்டை சரவணா நீயே பார்த்துக் கொள் என்று பாண்டியன் சொல்லிவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அரசி, பாண்டியன்
அதே போன்று டிராவல்ஸ் வைக்க ஆசைப்பட்ட கதிருக்கும் அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். நாளைக்கு கதிருடைய மாமனார் வந்து என்னிடம் எதுவும் கேட்டு விடக் கூடாது. அதனால் அந்த வயல் நிலத்தை விற்று அவனுக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்றார். மேலும், இந்த விஷயம் நம்மை தவிர வேறு யாருக்கும் தெரிய கூடாது அப்படியே தெரிந்தால் மீனாவும் சரி, கதிரும் சரி வயலை விற்க வேண்டாம், எங்களுக்கு பணம் வேண்டாம் என்று வந்து நிற்பார்கள் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 569ஆவது எபிசோடு
இதைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு அரசி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டிலிருந்து வந்த குமரவேல் அரசியிடம் பேச ஆசைப்பட்டு அரசி அரசி என்று கூப்பிட அந்த நேரம் பார்த்து கதிர் அங்கு வந்துவிட்டார். உடனே குமரவேலுவை பார்த்து ஏற்கனவே என்னுடைய அப்பா தடுத்து தான் உன்னை சும்மா விட்டேன். இனிமேல் என்னை யாரும் தடுக்க முடியாது. உன்னை சும்மாவே விட மாட்டேன் என்று மிரட்டினார்.
இதற்கு முன்னதாக எல்லாம் கதிர் பேசினால் உடனே குமரவேல் சண்டைக்கு செல்வார். ஆனால், இப்போதெல்லாம் குமரவேல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறார். இதற்கு காரணம் அவர் ஜெயிலுக்கு சென்று வந்தது என்று கூறப்படுகிறது. ஜெயில் வாழ்க்கை அவருக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டது.