- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு தான் ஞானமே பிறந்திருக்கு – அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொன்ன குமரவேல்!
ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு தான் ஞானமே பிறந்திருக்கு – அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொன்ன குமரவேல்!
Kumaravel Asking apology to Arasi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் குமரவேலுவிற்கு இப்போது தான் ஞானமே பிறந்திருக்கிறது. செய்த தவறுக்கு அரசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

விஜய் டிவி சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
Kumaravel Asking apology to Arasi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட் என்றால் அது அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டது தான். அது குமரவேலுவிற்கு டுவிஸ்ட் கொடுக்க பிறகு குமரவேல் வீட்டிலே கொஞ்ச நாட்கள் தங்கி அவருக்கு டார்ஜர் கொடுத்தார். கடைசியில் பாண்டியனுக்கு உண்மை தெரிய வர அரசியை தனது வீட்டிற்கே கூட்டி சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
கோமதியை காதல் திருமணம் செய்ததால் பாண்டியனுக்கும் அண்ணன் தம்பிகளான முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பம் பகை குடும்பமாக மாறியது. இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இரு குடும்பம் உறுப்பினர்களும் பேசிக் கொள்வதே கிடையாது. இந்த சூழலில் தான் எதிர்பாராத விதமாக கதிர் மற்றும் ராஜீக்கு திருமணம் நடக்க, அது சக்திவேல் மற்றும் முத்துவேல் குடும்பத்திற்கு அவமானமாக மாறுகிறது. இதைத் தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தை பழி தீர்க்க, சக்திவேலின் மகனான குமரவேல் அரசியை காதலிப்பதாக நாடகமாடுகிறார். அவருடன் வெளியில் சென்று வருகிறார். சினிமா, ஹோட்டல் என்று அவர்களது காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் குமரவேலுவைப் பற்றிய உண்மைகள் தெரிய வர அரசி அவரிடமிருந்து விலக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அரசியை கடத்திச் செல்கிறார் குமரவேல்.
அரசி, பாண்டியன், குமரவேல்
அரசிக்கு நடக்க இருந்த திருமணத்திற்கு முன்னதாக அவரை கடத்திச் சென்ற நிலையில் மறுநாள் அரசியுடன் குமரவேல் வீட்டிற்கு வருகிறார். இதைத் தொடர்ந்து தன்னை மட்டுமின்றி தனது குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டு குமரவேலுவை சித்திரவதை செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ஒரு கட்டத்தில் இந்த திருமணம் குறித்து பாண்டியனுக்கு தெரிய வர அரசியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றதோடு மட்டுமின்றி குமரவேல் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இதைத் தொடர்ந்து குமரவேலுவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் வரும் குமரவேலுவிற்கு மனசாட்சி உருத்தவே, தனது தவறை உணர்கிறார். இதற்கிடையில் ராஜீயும் தனக்கு நடந்த திருமணம் குறித்து குமரவேலுவிடம் எடுத்துச் சொல்லி அவருக்கு புரிய வைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 568ஆவது எபிசோடு
இதன் காரணமாக தனது தவறை உணர்ந்த குமரவேல் ராஜியிடம் அரசியைப் பற்றி விசாரிக்கிறார். மேலும், அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். மேலும், குமரவேல் மற்றும் அரசி இருவருக்கும் இடையில் மீண்டும் காதல் மலர்ந்து திருமணம் நடைபெறவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.