ரசிகர்களை ஏமாற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் – கண்டினுட்டி இல்லையா?
Pandian Stores 2 Serial Cheating : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தொடர்கதை என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முந்தைய நாள் காட்சியோடு தொடங்காமல் புதிய காட்சியோடு அடுத்த எபிசோடு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் ஆன இந்த சீரியலில் மீனா மற்றும் ராஜியின் ரோல் தான் ரசிகர்களுக்கு பிடித்தமானது. வீட்டிற்கு செல்லப் பிள்ளையான சரவணனுக்கு மட்டும் பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் நடைபெற்றது. செந்தில் மற்றும் கதிருக்கு அப்படியில்லை. செந்திலுக்கு காதல் திருமணம் நடந்தது. ஆனால், கதிருக்கு அப்படி இல்லை. காலத்தின் கட்டாயத்தால் நடந்தது.
கதிர் மற்றும் ராஜீ
இப்போது கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் தான் ரசிகர்களுக்கு பேவரைட் என்று சொல்லும் அளவிற்கு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் முந்தைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான சண்டைக் காட்சிகள் உடன் சீரியல் முடிந்தது. ஆனால், இன்றைய எபிசோடில் அதே காட்சிகள் உடன் தான் சீரியல் தொடங்கப்பட வேண்டும். ஆனால், அப்படி ஏதும் காட்சிகள் தொடங்கப்படவில்லை.
பாண்டியன் டிராவல்ஸ்
கடந்த எபிசோடில் ராஜீ மற்றும் கதிர் தொடர்பான காட்சிகளுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பாண்டியன் டிராவல்ஸிற்கு பழனிவேல் வந்தார். அப்போது அவரை டிராவல்ஸை பார்த்துக் கொள்ள வைத்துவிட்டு ராஜீ மற்றும் கதிர் இருவரும் ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு ராஜீக்கு பிடித்தமான புதிய உடைகளை கதிர் எடுத்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்னும் தீபாவளி கொண்டாட்டம் நடக்கவில்லை. ஆனால், இனிவரும் எபிசோடுகளில் தீபாவளி கொண்டாட்டம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஷாப்பிங் சென்ற கதிர்
அதற்குள்ளாக தனது மனைவி ராஜியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்ற கதிர் அடுத்து ஹோட்டலுக்கு சென்றார். அதன் பிறகு இருவரும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டனர். ஆனால், இந்த காட்சிகள் எல்லாம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே தங்கமயில் மற்றும் சரவணன் இடையிலான காட்சிகள் நடந்து வாக்குவாதம் ஆன நிலையில் அதன் பிறகு என்ன நடந்தது? ஏன் சரவணன் தனது மாமனார் மாணிக்கத்திடம் காசு எடுத்தது பற்றி கேட்கவில்லை என்று பல கேள்விகள் எழுகிறது.
கதிர் மற்றும் ராஜீ
இப்படியெல்லாம் இருக்கும் போது முதல் நாள் முடிந்த காட்சியோடு அடுத்த நாள் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக புதிய காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவது என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.