- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உண்மையை உடைக்கும் பல்லவன்; வீட்டை விட்டு விறுவிறுவென வெளியேறும் நிலா - அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
உண்மையை உடைக்கும் பல்லவன்; வீட்டை விட்டு விறுவிறுவென வெளியேறும் நிலா - அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
அய்யனார் துணை சீரியலில் நிலாவுக்கு உண்மைகள் அனைத்தும் தெரிய வந்ததை அடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ayyanar thunai serial Today Episode
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிரெண்டிங் சீரியல்களில் அய்யனார் துணை சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் விறுவிறுப்பான கதை களத்தால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்போம் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த சீரியலை பிற மொழியிலும் ரீமேக் செய்து வருகிறார்கள். அந்த அளவுக்கு டிமாண்ட் உள்ள தொடராக அய்யனார் துணை மாறி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடித்த மதுமிதா தான் அய்யனார் துணை சீரியலிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் நிலா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அரவிந்த் சேசு நடித்துள்ளார். அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மனோகரிடம் சண்டை போடும் நிலா
நிலாவின் தந்தை மனோகரால் சோழன் கடத்தப்பட்டார். இதையடுத்து களத்தில் இறங்கிய சோழனின் தம்பிகள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை காப்பாற்றினர். சோழனை மீட்ட கையோடு அவனை மனோகரின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் சோழன் மீது எந்த தவறும் இல்லை என்பதை அவருடைய சகோதரர்கள் நிரூபித்துள்ளனர். அதேபோல் மனோகர் எந்த நோக்கத்திற்காக நிலாவையும் சோழனையும் இங்கு அழைத்து வந்தார் என்கிற எல்லா உண்மையையும் போட்டுடைக்கிறார் பல்லவன். எல்லா உண்மையும் தெரிந்த பின்னர் நிலா, மனோகர் இடம் பயங்கரமாக சண்டை போடுகிறார்.
கிழியும் மனோகரின் முகத்திரை
முன்னதாக மனோகர் சோழனிடம், ஒரு வாரத்தில் என்னுடைய மகளை உன்னிடம் இருந்து பிரித்து கூட்டிட்டு வருவேன் என சவால் விட்டிருந்தார். தற்போது அந்த சவாலில் மனோகர் தோல்வியடைந்ததால் சோழன் நிலாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று இருக்கிறார். போக வேண்டாம் என தனது தந்தை தடுத்தும் கேட்காத நிலா கெத்தாக சோழனின் சகோதரர்களுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அய்யனார் துணை ஃபேமிலியோடு இருக்க வேண்டும் என்பதுதான் நிலாவின் ஆசை. அவருக்கு அவரின் தந்தை மனோகருடன் இருக்க சுத்தமாக விருப்பமில்லை. அவர் ஆசைப்பட்டபடியே தற்போது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
நிலாவின் ஆசை நிறைவேறுமா?
நிலாவுக்கு சென்னைக்கு சென்று நல்ல வேலை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதே நேரத்தில் சேரனுக்கு புது ஜோடி வந்து விட்டார். சேரனுக்கு லவ் செட் ஆனால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று நிலா ஏற்கனவே கூறி இருந்தார். இதனால் நிலா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? மனோகரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.