- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இது கனவா? நிஜமா? நிலா கட்டிப்பிடித்ததால் குஷியான சோழன் - அய்யனார் துணை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
இது கனவா? நிஜமா? நிலா கட்டிப்பிடித்ததால் குஷியான சோழன் - அய்யனார் துணை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
அய்யனார் துணை சீரியலில் நிலாவின் லேப்டாப் தொலைந்துபோன நிலையில் அதை கண்டுபிடித்துக் கொடுக்க சோழனின் உதவியை நாடி இருக்கிறார் நிலா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் சோழன் மீது கடுப்பில் இருந்த நிலா, ஆபிஸுக்கு அவரின் காரில் செல்லாமல் தான் ஆட்டோ பிடித்து செல்வதாக கூறி கிளம்பிச் சென்ற நிலையில், ஆட்டோவிலேயே லேப்டாப்பை மிஸ் பண்ணிவிடுகிறார். அந்த லேப்டாப்பில் தான் முக்கியமான ஃபைல்ஸ் எல்லாம் இருக்கிறது. அதை இன்று ஆபிஸில் ஒப்படைக்க வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நிற்கிறார் நிலா. விஷயம் தெரிந்து பாஸ், நிலாவை திட்ட, அவர் உடனே சோழனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நிலாவை சந்தேகப்படும் பாஸ்
சோழன் நிலா சென்ற ஆட்டோ எது என்பதை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். பின்னர் சிசிடிவி உதவியுடன் அந்த ஆட்டோ இருக்கும் ஸ்டாண்டை கண்டுபிடித்து அங்கு செல்கிறார். மறுபுறம் ஆபிஸில் நிலாவின் பாஸ் ராகவ், நிலாவிடம் லேப்டாப் என்ன ஆச்சு என கேட்க, அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் கலங்கி நிற்கிறார். தனக்காக ஒருநாள் அந்த புராஜெக்ட் பிரசண்டேஷனை தள்ளி வைக்க முடியுமா என நிலா கேட்க, அதற்கு ராகவ் முடியவே முடியாது என சொல்வதோடு, லேப்டாப் வீட்ல வச்சிருக்கியா இல்லை எங்கயாவது வித்துட்டியா என கேட்க, நிலா அதெல்லாம் இல்லை தொலைஞ்சு போச்சு என கூறுகிறார்.
லேப்டாப் உடன் வந்த சோழன்
பின்னர் ராகவ்விற்கு போன் போடும் கிளையண்ட், தாங்கள் ஆபிஸின் கீழ் தளத்திற்கு வந்துவிட்டதாக சொல்ல, நிலா என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அப்போது எண்ட்ரி கொடுக்கும் சோழன், லேப்டாப்பை கொண்டு வந்து நிலாவிடம் ஒப்படைக்கிறார். இதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடையும் நிலா, அந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு சென்று, பிரசண்டேஷனை சூப்பராக செய்து முடிக்கிறார். கிளையண்டும் ஹாப்பியாகி, புராஜெக்டுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். பாஸ் ராகவ்வும், நிலா செய்த டிசைனை பாராட்டுகிறார். இதனால் நிலா சந்தோஷமடைகிறார்.
சோழனை கட்டிப்பிடித்த நிலா
இந்த மீட்டிங் முடிஞ்சதும் ரூமை விட்டு வெளியே வரும் நிலா, சோழன் மட்டும் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்யலேனா இதெல்லாம் நடந்திருக்காது என நினைச்சு பார்த்து, சோழனுக்கு போன் போடுகிறார். எங்க இருக்கீங்க என கேட்க, சோழன், வெளிய தான் இருக்கேன் என சொல்கிறார். அடுத்த வார்த்தை பேசுவதற்குள், ஆபிஸ் கீழே ஓடோடி வந்த நிலா, எப்படி உங்களுக்கு இந்த லேப்டாப் கிடைச்சது என கேட்க, தான் அந்த ஆட்டோ ஸ்டாண்டில் சென்று நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி அந்த ஆட்டோக்காரரிடம் இருந்து லேப்டாப்பை வாங்கி வந்ததாக கூறுகிறார்.
கடைசி நேரத்தில் லேப்டாப்பை கொண்டு வந்து தன்னை கடவுள் போல் காப்பாற்றிய சோழனை கட்டிப்பிடிக்கும் நிலா, உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ஒன்னு கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனால் உற்சாகத்தில் திளைக்கும் சோழன், அப்படியே கார் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார். அங்கு தன் அண்ணன், தம்பிகளை வரவைத்து, நிலா என்னைக் கட்டிப்பிடிச்சிட்டா என சொல்லி சந்தோஷப்படுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

