- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரீஷுக்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல்
கிரீஷுக்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட போலீஸ் முனைப்பு காட்டும் நிலையில், அடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ், பள்ளியில் தன்னுடன் படிக்கும் அஜய் என்கிற சிறுவனை தாக்கிய விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அஜய்யின் தந்தை கிரீஷின் மீது போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, கிரீஷிடம் விசாரணை நடத்த இரண்டு போலீஸார் ஸ்கூலுக்கு செல்கின்றனர். இதையடுத்து பள்ளியின் மேனேஜர் கிரீஷ் விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்டும் போலீஸார் செவிசாய்க்கவில்லை. அஜய்யின் தந்தை செல்வாக்குமிக்கவர் என்றதால் நிலைமை கையைமீறி சென்றுவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.
போலீஸிடம் கெஞ்சும் முத்து
இன்று கிரீஷின் கார்டியனுக்கு போலீஸ் விசாரிக்க வந்துள்ள தகவலை மேனேஜர் போன் போட்டு சொல்கிறார். அப்போது அருகில் இருந்த ரோகிணி, கிரீஷை நினைத்து கவலைப்படுகிறார். பின்னர் முத்துவும் மீனாவும் கிரீஷை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்கின்றனர். அப்போது கிரீஷை விசாரிக்க போலீஸ் வந்திருப்பதை ஸ்கூல் மேனேஜர் முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்து தான் அவர்களிடம் பேசுவதாக சொல்கிறார். பின்னர் விசாரிக்க வந்த போலீஸாரை சந்திக்கும் முத்து, தான் அஜய்யின் அப்பாவை சந்தித்து அவரிடம் இந்த கேஸை வாபஸ் வாங்க சொல்வதாக கூறுகிறார்.
கிரீஷுக்காக காலில் விழுந்த முத்து
பின்னர் அஜய்யின் வீட்டுக்கு செல்கிறார் முத்து. அங்கு அஜய்யின் தந்தையை சந்தித்து பேசும் அவர், உங்க பையன் கூட படிக்குற கிரீஷ் விஷயமா பேசலாம்னு வந்திருக்கேன். கிரீஷ் ரொம்ப சின்ன பையன் சார், அவன் தெரியாம தப்பு பண்ணிட்டான். அவனை மன்னிச்சு விட்றுங்க என கேட்கிறார். அதற்கு அவர், தெரியாம பண்ணுறது தான் மிஸ்டேக், தெரிஞ்சு பண்ணுறதுக்கு பேரு குற்றம், அதை தான் அந்த பையன் பண்ணிருக்கான். கொஞ்சம் விட்றுந்தா என்னோட பையன் இன்னைக்கு இல்லாம போயிருப்பான். தப்பு பண்ணவன் தண்டனையை அனுபவிச்சு தான் ஆகணும். போங்க இங்க இருந்து என கறாராக சொல்லிவிடுகிறார்.
மனம் இறங்காத அஜய் அப்பா
இதையடுத்து வேறு வழியின்றி அஜய்யின் தந்தை காலில் விழுந்து கதறுகிறார் முத்து. அதைப்பார்த்தும் மனம் இறங்காத அஜய்யின் தந்தை, இந்தமாதிரி காலில் விழுவதெல்லாம் நிறைய பாத்தாச்சு, கால்ல விழுந்தா எல்லாம் சரி ஆகிடுமா. இதுக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன். என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. இங்க இருந்து வெளிய போங்க. இன்னொரு முறை இங்க வந்தா உன் மேலயும் புகார் கொடுத்திருவேன் என எச்சரிக்கிறார். இதையடுத்து ரோகிணியின் தோழி வீட்டுக்கு செல்கிறார் மீனா. அங்குதான் ரோகிணியும் இருக்கிறார். பின்னர் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.