- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரீஷ் மீது போலீஸில் புகார்... ரோகிணிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
கிரீஷ் மீது போலீஸில் புகார்... ரோகிணிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷிடம் விசாரணை நடத்த போலீஸார் ஸ்கூலுக்கு வந்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை மீண்டும் கண்டுபிடித்த முத்து, அவனை மீனாவின் அம்மா வீட்டில் தங்கவைத்து உள்ளனர். கிரீஷ் ஸ்கூலில் சண்டைபோட்டதால், அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்க டாக்டரிடம் அழைத்து செல்கிறார் முத்து. இந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு செல்லும் ரோகிணி, கிரீஷ் என்ன சொல்லப்போகிறானோ என்கிற பதற்றத்திலேயே இருக்கிறார். இதையடுத்து மீனாவும், முத்துவும் ரோகிணியை மருத்துவமனையில் பார்த்து என்ன விஷயம் என கேட்க, தலைவலிக்காக டாக்டரை பார்க்க வந்ததாக சொல்லி சமாளிக்கிறார் ரோகிணி.
கிரீஷுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் டாக்டர்
இதையடுத்து கிரீஷுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறார். அவரிடம் என்ன பிரச்சனை என்பதை விசாரிக்கிறார் முத்து. அப்போது ரோகிணியும் அருகில் இருக்கிறார். அந்த டாக்டர், கிரீஷுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார். தற்போது கிரீஷோட பிரச்சனை அவங்க அம்மா தான் என்று கூறும் அவர், இவனுடைய அம்மா கூட இல்லாதது தான் இவனோட கோபத்துக்கே காரணம் என சொல்கிறார்.
இவனுக்கு அப்பா இல்ல, அம்மா இருந்தும் கூட இல்லையே என்கிற ஏக்கம் தான் கிரீஷுக்கு அதிகமா இருக்கு. ஸ்கூலில் மற்ற பசங்களோட அம்மா, அப்பா எல்லாம் வந்து பார்த்துட்டு போறாங்க. நம்ம அம்மா வரவே இல்லையே என்கிற கவலை... வரவே மாட்டாங்களா என்கிற பயம் இதெல்லாம் சேர்ந்து கோபமாக வெளியே வந்திருப்பதாக சொல்கிறார் டாக்டர்.
கிரீஷிடம் விசாரிக்க வரும் போலீஸ்
மறுபுறாம் கிரீஷ் படிக்கும் பள்ளிக்கு வரும் இரண்டு போலீஸார், அங்குள்ள பள்ளி மேனேஜரிடம், சென்று கிரீஷ், அஜய் என்கிற சிறுவனை தாக்கியது பற்றி விசாரிக்க வந்ததாக கூறுகிறார். அஜய்யை கிரீஷ் பென்சிலில் குத்தியதோடு, பூத்தொட்டியை தூக்கி அடிக்க வந்ததாக அவன் மீது தங்களுக்கு புகார் வந்திருப்பதாக கூறுகிறார். கிரீஷ் தாக்கியதால் அஜய்க்கு பேனிக் அட்டாக் வந்திருப்பதால், அவனுடைய தந்தை கிரீஷ் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
நாங்க கிரீஷை விசாரிக்க வேண்டும் என சொல்கிறார் போலீஸ். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என மேனேஜர் கேட்டதும், அஜய்யோட அப்பா சொசைட்டில பெரிய ஆள், நாங்க இப்போ இதை விசாரிக்காமல் விட்டுவிட்டால், இதை மேலதிகாரிகளிடம் பேசி பிரச்சனை ஆக்கி விடுவார் என கூறுகிறார்.
கிரீஷுக்காக போலீசிடம் கெஞ்சும் முத்து
இதையடுத்து வேறு வழியின்றி கிரீஷின் கார்டியனான ரோகிணியின் தோழிக்கு போன் போடுகிறார் மேனேஜர். அவரிடம் போலீஸ் விசாரிக்க வந்திருக்கும் தகவலை கூறுகிறார். இந்த தகவல் முத்து - மீனாவுக்கும் தெரியவர, அவர்களும் கிரீஷ் உடன் ஸ்கூலுக்கு செல்கிறார்கள். கிரீஷை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீஸ் வந்திருப்பதாக முத்துவிடம் மேனேஜர் சொன்னதும், அவர் மீனா உடன் கிரீஷை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
பின்னர் போலீஸிடம் மன்னிப்பு கேட்கும் முத்து, அவனை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். ஆனால் அந்த போலீசோ, அஜய்யின் தந்தை கிரீஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.